மார்ச் 4-ல் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்தபோது விபத்தில் சிக்கிய மாணவர் மருத்துவமனையில் மரணம்

விக்னேஷ்

விக்னேஷ்

Updated on
1 min read

திருச்சி: தஞ்​சாவூர் மாவட்​டம் செங்​கிப்​பட்​டி​யில் நடை​பெற்ற தவெக கூட்​டத்​துக்கு சென்ற தவெக தலை​வர் விஜய் வாக​னத்தை பின்​தொடர்ந்து சென்​ற​போது, விபத்​தில் சிக்கி காயமடைந்த கல்​லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயி​ரிழந்​தார்.

தஞ்​சாவூர் மாவட்​டம் செங்​கிப்​பட்​டி​யில் கடந்த மார்ச் 4-ம் தேதி நடை​பெற்ற தவெக நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க தவெக தலை​வர் விஜய், திருச்​சிக்கு விமானத்​தில் வந்​து, அங்​கிருந்து காரில் செங்​கிப்​பட்டி புறப்​பட்​டார்.

அப்​போது, திருச்சி தேசிய கல்​லூரி​யில் பி.​காம்., 3-ம் ஆண்டு படித்து வந்த மேல​கல்​கண்​டார்​கோட்டை மகாலட்​சுமி நகரைச் சேர்ந்த பாண்​டியன் மகன் விக்​னேஷ்(19), தனது நண்​பர் ஹாரூனுடன் இருசக்கர வாக​னத்​தில் விஜய் சென்ற காரை பின்​தொடர்ந்​தார்.

அப்போது விஜய்யின் காருக்கு அருகில் செல்ல முயன்றபோது, அவர்களது இருசக்கர வாகனம் வளம்​பக்​குடி என்ற இடத்​தில் சாலை​யில் நின்று கொண்​டிருந்த போலீஸ் வாக​னத்​தின் மீது மோதி​யது.

அதில் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ஹாரூன் இருவரும் நிலைதடுமாறி சாலையில் சென்ற மற்ற இருசக்கர வாகனங்களின் மீது விழுந்தனர். இதன் காரணமாக அடுத்தடுத்த வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

இந்தச் சம்பவத்தில் விக்னேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே இந்த விபத்தில் கால் முறி​வு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற ஹாரூன் வீடு திரும்​பி​னார். இந்​நிலை​யில், கடந்த 20 நாட்​களாக தீவிர சிகிச்சை பிரி​வில் இருந்த விக்​னேஷ், நினைவு திரும்​பாமலேயே நேற்று பரிதாபமாக உயி​ரிழந்​தார்.

இதையடுத்​து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்​காக திருச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. இந்த விபத்து குறித்து செங்​கிப்​பட்டி போாலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து வி​சாரணை நடத்தி வருகின்​றனர்​.

<div class="paragraphs"><p>விக்னேஷ்</p></div>
பழநியில் மார்ச் 26-ல் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in