எடுத்த நடவடிக்கைகள் என்ன? - முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் குறித்து ஆர்டிஐ-யில் கேட்கலாம்

மாநில தகவல் ஆணையம் அறிவிப்பு
எடுத்த நடவடிக்கைகள் என்ன? - முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் குறித்து ஆர்டிஐ-யில் கேட்கலாம்
Updated on: 
1 min read

சென்னை: திரு​வண்​ணா​மலை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வலக மக்​கள் குறைதீர்க்​கும் முகாமில் அளிக்​கப்​பட்ட மனுக்​கள் பள்​ளிக் கல்​வித் துறைக்கு மாற்​றப்​பட்ட நிலை​யில், அவற்​றின் மீதான நடவடிக்கை மற்​றும் முன்​னேற்ற அறிக்​கையை கேட்டு செங்​கல்​பட்டை சேர்ந்த இரா.கோபி​நாத் என்​பவர் ஆர்​டிஐ மூலம் விண்​ணப்​பித்​திருந்​தார்.

ஆனால், முதல்​வரின் தனிப்​பிரிவு, குறைதீர்க்​கும் நாள் முகாம் மற்​றும் ஜமாபந்தி மனுக்​கள் மீது தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் தகவல் கேட்க வழி​வகை இல்லை எனக்​கூறி, கடந்த 2015-ம் ஆண்​டின் பழைய உத்​தரவு ஒன்றை மேற்​கோள் காட்டி திரு​வண்​ணா​மலை மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலக பொதுத் தகவல் அலு​வலர் விவரங்​களை வழங்க மறுத்​து​விட்​டார்.

இது தொடர்​பான வழக்கு விசா​ரணை மாநில தகவல் ஆணை​யர் வி.பி.ஆர்​.இளம்​பரிதி முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அவர் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: முதல்​வரின் தனிப்​பிரிவு, மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கங்​கள் மற்​றும் அனைத்து அரசுத் துறை​களும் ஆர்​டிஐ-​யின் கீழ் பொது அதி​கார அமைப்​பு​களாகவே வரு​கின்​றன.

பொது​மக்​கள் அளிக்​கும் மனுக்​கள் அரசு அலு​வல​கத்​தில் பெறப்​பட்டு குறி​யீட்டு எண் வழங்​கப்​படும்​போதே அவை ஆவண​மாக மாறி​விடு​கின்​றன. அந்த ஆவணங்​கள் மற்​றும் அவற்​றின் மீது எடுக்​கப்​படும் அனைத்து தொடர் நடவடிக்​கைகளும் ஆர்​டிஐ கீழ் ‘தகவல்’ வரையறைக்​குள் அடங்​கும்.

எனவே, முதல்​வர் தனிப்​பிரிவு, குறைதீர்க்​கும் நாள் மற்​றும் ஜமாபந்தி மனுக்​கள் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் குறித்து தகவல் கோர பொது​மக்​களுக்கு முழு உரிமை​யுண்​டு.

எனினும், பெறப்​பட்ட மனுக்​கள் மீது நிர்​வாக ரீதி​யாக நடவடிக்கை எடுக்க குறைந்​த​பட்ச அவகாசம் தேவைப்​படு​வ​தால், மனு அளித்த 30 நாட்​களுக்கு பிறகு ஆர்​டிஐ மூலம் இத்​தகவல்​களை கோரலாம்.

இந்த உத்​தரவு தமிழக அரசின் அனைத்து பொது அதி​கார அமைப்​பு​களுக்​கும் பொருந்​தும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இத்​தீர்ப்பை அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் சுற்​றறிக்​கை​யாக அனுப்ப உத்​தர​விட்​டுள்​ளது.

எடுத்த நடவடிக்கைகள் என்ன? - முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் குறித்து ஆர்டிஐ-யில் கேட்கலாம்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது: மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in