2047-ல் பொருளாதார வளர்ச்சியில் முதல் நாடாக இந்தியா மாறும்: எல்.முருகன் நம்பிக்கை

2047-ல் பொருளாதார வளர்ச்சியில் முதல் நாடாக இந்தியா மாறும்: எல்.முருகன் நம்பிக்கை
Updated on
1 min read

திருவள்ளூர்: 2047-ம் ஆண்டு பொருளா​தார வளர்ச்​சி​யில் முதல் நாடாக இந்​தியா மாறும் என மத்​திய இணை அமைச்​சர் எல்.முருகன் தெரி​வித்​தார்.

நாடு முழு​வதும் மத்​திய பொதுத்​துறை நிறு​வனங்​களில் காலி​யாக உள்ள 61,000 மேற்​பட்ட பணி​யிடங்​களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்​களுக்கு பணி ஆணை​கள் வழங்​கும் விழா நேற்று நடை​பெற்​றது. டெல்​லி​யில் நடை​பெற்ற பிர​தான நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பணி​யாளர்​களுக்கு பணி ஆணை​களை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து திரு​வள்​ளூர் மாவட்​டம் ஆவடி​யில் உள்ள சிஆர்​பிஎப் குரூப் மையத்​தில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முருகன் கலந்து கொண்டு 328 உள்​துறை, பாது​காப்​புத் துறை, பொதுத்​துறை நிறு​வனங்​களைச் சார்ந்த பணி​யாளர்​களுக்கு பணி ஆணை​களை வழங்​கி​னார்.

தொடர்ந்து மேடை​யில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் பேசி​ய​தாவது: 2047-ம் ஆண்டு இந்​தியா வல்​லரசு நாடாக மாறுவதற்கு, தற்​போது பணிஆணை பெற்​றுள்ள அரசு பணி​யாளர்​கள் அனைத்து முயற்​சிகளையும் மேற்​கொள்ள வேண்​டும். 2010ம் ஆண்​டுக்கு முன்பு பொருளா​தார வளர்ச்​சி​யின் எந்த இடத்தில் உள்​ளோம் என்​பதை தேடிக் கொண்​டிருந்​தோம். ஆனால் 2011-க்கு பிறகு வளர்ச்​சி​யின் மூலம் தற்​போது நான்​காவது இடத்தை பெற்​றுள்​ளோம்.

2047-ம் ஆண்டு பொருளா​தார வளர்ச்​சி​யில் முதல் நாடாக இந்தியா மாறும். தற்​போது நாம் பல்​வேறு துறை​களில் முன்னேற்றம் கண்டு வரு​கிறோம். ஆப்​ரேஷன் சிந்​தூர் மூலம் எல்லை தாண்​டா​மலே நாம் வெற்றி அடைந்​துள்​ளோம். அதன் மூலம் இந்​தி​யாவை உலக நாடு​கள் உற்று நோக்​கு​கின்​றன. 2037-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்டி நம் நாட்​டில்​ நடை​பெற உள்​ளது. இவ்வாறு அவர்​ பேசி​னார்​.

2047-ல் பொருளாதார வளர்ச்சியில் முதல் நாடாக இந்தியா மாறும்: எல்.முருகன் நம்பிக்கை
புதிய மாற்றங்களின் தொடக்கம் | 49-வது சென்னை புத்தகக் காட்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in