புதிய மாற்றங்களின் தொடக்கம் | 49-வது சென்னை புத்தகக் காட்சி

புதிய மாற்றங்களின் தொடக்கம் | 49-வது சென்னை புத்தகக் காட்சி

Published on

சென்னை புத்​தகக் காட்​சி​யில் எனக்கு முன்​னால் உரை​யாற்​றிய ஒரு பேச்​சாளர் இளைஞர்​கள் படிப்​ப​தே​யில்லை என்று குறைபட்​டுக்​கொண்டு, புத்​தகம் படிப்​ப​தன் அவசி​யத்தை வலி​யுறுத்தி அறி​வுரை வழங்​கிக் கொண்​டிருந்​தார். அவரைத் தொடர்ந்து பேசிய நான், அதை மறுத்​தேன். எவ்​வளவு இளைஞர்​கள், புதி​தாக வாசிக்க தொடங்​கிய​வர்​கள் இந்த கண்​காட்​சிக்கு வந்​திருக்​கிறார்​கள் என்​பதை சுட்​டிக்​காட்​டினேன். உண்​மை​யில் புத்தக வாசிப்பை நோக்கி ஒரு புதிய தலை​முறை எழுந்து வந்​திருக்​கிறது என்​ப​தற்கு இந்த புத்​தகத் திரு​விழா​வில் கண்ட காட்​சிகளே சாட்​சி.

சமூக வலை​தளங்​களின் வழி​யாக அவர்​கள் அறிந்த எழுத்​தாளர்​களைத் தேடி அலை​யலை​யாய் வந்து கொண்​டிருந்​தார்​கள். எங்​கிருந்து படிக்​கத் தொடங்​கவேண்​டும் என்ற கேள்​வியை நிறைய இளைஞர்​கள் என்​னிடம் எழுப்​பி​னார்​கள். கடந்த சில வருடங்​களில் சென்னை புத்​தகக் காட்​சி​யில் வார வேலை​நாட்​களில் கூட்​டம் இருக்​காது. பொங்​கலுக்கு மக்​கள் ஊருக்கு போய்​விட்​டால் கண்​காட்​சி​யில் விற்​பனை இருக்​காது என்ற நிலை​தான் இருந்​தது. இந்த ஆண்டு அது முற்​றாக மாறி​யிருப்​பதை காண முடிந்​தது. எல்லா நாட்​களும் காலை 11 மணிக்கே புத்​தகக் காட்சி தொடங்​கியது. தொடங்​கிய​திலிருந்தே வாசகர்​கள் பரவலாக வந்​தவண்​ணம் இருந்​தனர். மாலை வேளை​களில் கூட்​டம் அலைமோ​தி​யது. தமிழ்​நாட்​டின் எல்லா மாவட்​டங்​களி​லும் புத்​தகக் காட்​சிகள் நடை​பெறுகின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in