‘புத்தக கொள்முதல் கணக்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ - எழுத்தாளர் சோ.தர்மன் வலியுறுத்தல்

‘புத்தக கொள்முதல் கணக்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ - எழுத்தாளர் சோ.தர்மன் வலியுறுத்தல்
Updated on: 
1 min read

சென்னை: நூல​க புத்​தகங்​கள் கொள்முதல் பட்​டியல், வெளிப்படையற்ற கணக்​குகளை வெள்ளை அறிக்​கையாக வெளியிட சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்​தாளர் சோ.தர்​மன் வலியுறுத்​தி​யுள்​ளார்.

இது​தொடர்​பாக அவர் கூறியது: பேராசி​ரியரான எழுத்​தாளர் பெரு​மாள் முருக​னும், அவரது மனைவியும் காலச்​சுவடு நிறு​வனத்​தில் முதலீட்​டாளர்​கள். தனியார் பதிப்​பகத்​தில் முதலீடு செய்​தவர், அரசு புத்​தக தேர்​வுக் குழு​வில் உறுப்​பின​ராக இருக்​கலாமா. அப்​படி அவர் இடம்​பெற்​றிருந்​தால், அவர் மூலம் அந்த தனியார் பதிப்​பகத்​தின் எத்​தனை தலைப்​பு​கள் தேர்​வாகிஅரசு நூல​கங்​களுக்​குள் சென்​றுள்​ளன, பாரதி புத்​தகாலயம், நியூ செஞ்​சுரி புக் ஹவுஸ் போன்ற நேரடி அரசி​யல் பின்னணி கொண்ட நிறு​வனங்​களுக்கு திமுக ஆட்​சி​யில் வழங்​கப்​பட்ட புத்​தக கொள்​முதல் ஆணைகளின் மொத்த மதிப்பு என்ன?

வெளிப்​படை​யான புத்​தக கொள்​முதல் கொள்கை என்​கின்​றனர். ஆனால், எந்​தெந்த பதிப்​பகத்​திடம் எவ்​வளவு தொகைக்கு எத்​தனை புத்தகங்​கள் வாங்​கப்​பட்​டன என்ற பட்​டியலை எந்த அரசும் வெளியிடுவது இல்லை. மத்​திய அரசின் ‘சமக்ர சிக் ஷா’ திட்​டத்​தின் மூலம் கமுக்​க​மாக புத்​தக கொள்​முதல் ஆணைகளை பல பதிப்​பகங்​கள் பெற்​றுள்​ளன. இந்த ஆணைகளை வழங்​கிய அதி​காரி​கள் யார், மத்​திய அரசு வழிகாட்​டுதலின்​படி, இந்த ஆணைகளை ஏன் இணை​யதளத்​தில் பதிவேற்​றவில்லை?

சென்னை பன்​னாட்டு புத்​தகக்காட்சி என்ற பெயரில் குறிப்​பிட்டஒருசிலர் அடங்​கிய குழு பெரும் தொகையை மானியம், அரசு நிதி​யாகப் பெறுகிறது. அதேபோல, மருத்​துவ நூல்​களை தமி​ழில் மொழிபெயர்க்க கலைஞர் மருத்​துவ நூல் மொழிபெயர்ப்பு திட்​டத்​தில் பல கோடி ஒதுக்​கப்​பட்​டது. இது​வரை எத்​தனை நூல்​கள் அச்​சாகி வந்​துள்​ளன.

புத்​தக கொள்​முதல் என்​பது மக்​கள் வரிப்பணத்​தில், தலைமுறைகளுக்​கான வாசிப்பை உரு​வாக்​கும் அறப்​பணி. அரசு உடனடி​யாக இதில் தலை ​யிட்டு, அனைத்து கொள்​முதல் பட்​டியல்களை​யும், வெளிப்​படையற்ற கணக்​கு​களை​யும் வெள்ளை அறிக்​கை​ வேண்​டும். இவ்​வாறு கூறியுள்ளார்.

‘புத்தக கொள்முதல் கணக்கு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ - எழுத்தாளர் சோ.தர்மன் வலியுறுத்தல்
தவெகவின் 6 மாத கால ஆட்சி எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

X