பூங்காநகர் உட்பட 13 ரயில் நிலையங்களில் 495 சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி தீவிரம்

பூங்காநகர் உட்பட 13 ரயில் நிலையங்களில் 495 சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி தீவிரம்
Updated on
1 min read

சென்னை: பயணி​கள் பாது​காப்பு மற்​றும் கண்​காணிப்பை பலப்​படுத்​தும் வகை​யில், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் பூங்கா நகர், தண்​டை​யார்​பேட்​டை, கொருக்​குப்​பேட்டை உட்பட 13 ரயில் நிலை​யங்​களில் 495 சிசிடிவி கேம​ராக்​கள் நிறு​வும் பணி முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

சென்னை ரயில்வே கோட்​டத்​தில் சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்​டு, சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம் உட்பட பல்​வேறு புறநகர் ரயில் வழித்​தடங்​களில் உள்ள ரயில் நிலை​யங்​களில் சிசிடிவி கேம​ராக்​களை நிறு​வி, தீவிர​மாக கண்​காணிக்​கப்​படு​கின்​றன.

அந்த வகை​யில், கடந்த நிதி​யாண்​டில் மட்​டும், எண்​ணூர், அத்​திப்​பட்​டு, மீஞ்​சூர், பொன்​னேரி, கவரைப்​பேட்​டை, வில்​லி​வாக்​கம், கொரட்​டூர், திரு​முல்​லை​வாயல், ஆவடி, பட்​டாபி​ராம், நெமிலிச்​சேரி, திருநின்​றவூர், செவ்​வாப்​பேட்டை, புட்​லூர், ஏகாட்​டூர், கடம்​பத்​தூர், செஞ்சி பனம்​பாக்​கம், வண்​ணாரப்​பேட்​டை, ராயபுரம் மற்​றும் மணவூர் ஆகிய 26 ரயில் நிலை​யங்​களில் 923 சிசிடிவி கேம​ராக்​கள் செயல்​பாட்​டுக்​குக் கொண்டு வரப்​பட்​டுள்​ளன.

அந்த இடங்​களில் நிகழ்​நேர கண்​காணிப்​புத் திறனை மேம்​படுத்​தி, பயணி​களின் பாது​காப்பை உறுதி செய்​யப்​படு​கிறது. இதன் ​தொடர்ச்​சி​யாக, 13 ரயில் நிலை​யங்​களில் சிசிடிவி கேம​ராக்​கள் நிறு​வும் பணி முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில் நிலை​யங்​களில் பயணி​கள் பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யில், பல்​வேறு நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

இதன் ஒருபகு​தி​யாக, பயணி​கள் அதி​கம் வந்து செல்​லும் ரயில் நிலை​யங்​களில் பாது​காப்பை உறுதி செய்ய, சிசிடிவி கேம​ராக்​கள் நிறு​வி, தீவிர​மாக கண்​காணிக்​கப்​படு​கிறது.

அந்​தவகை​யில், பூங்கா நகர், தண்​டை​யார்​பேட்​டை, கொருக்​குப்​பேட்​டை, கத்​தி​வாக்​கம், வியாசர்​பாடி ஜீவா, பெரம்​பூர், பெரம்​பூர் கேரேஜ் ஒர்க்​ஸ், அம்​பத்​தூர், வேப்​பம்​பட்​டு, மோசூர், புளியமங்​கலம், திருத்​தணி மற்​றும் ஆம்​பூர் உள்ளிட்ட 13 முக்​கிய ரயில் நிலை​யங்​களில் 495 சிசிடிவி கேம​ராக்​களை நிறு​வும் பணி தற்​போது நடை​பெறுகின்​றன. இதன் மூலம் பயணி​கள் மற்​றும் செயல்​பாட்டு மண்​டலங்​களில் கண்​காணிப்பு மேலும் பலப்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

பூங்காநகர் உட்பட 13 ரயில் நிலையங்களில் 495 சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி தீவிரம்
மழைக்காலம் நெருங்குவதால் வெள்ளத்தடுப்பு பணிகளை தாமதமின்றி தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in