மழைக்காலம் நெருங்குவதால் வெள்ளத்தடுப்பு பணிகளை தாமதமின்றி தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

மழைக்காலம் நெருங்குவதால் வெள்ளத்தடுப்பு பணிகளை தாமதமின்றி தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை, ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை ஆகிய துறை​களின் செயல்​பாடு​கள் குறித்​தும், கோடைக் காலத்​தில் தடை​யின்றி குடிநீர் விநி​யோகம் செய்​வது தொடர்​பாக​வும் முதல்​வர் விஜய் தலை​மை​யில் தலை​மைச் செயல​கத்​தில் நேற்று ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்றது.

ஆய்​வுக்​குப்​பின் முதல்​வர் விஜய் அறி​வுறுத்​தி​ய​தாவது: சென்னை மாநக​ராட்சி, அனைத்து மாவட்​டங்​களி​லும் குடிநீர் வழங்​கலில் உள்ள இடர்​பாடு​களை களைந்​து, லாரி​களின் மூல​மாக​வும், புதிய ஆழ்​துளைக் கிணறுகள் அமைத்​தும் சீரான குடிநீர் விநி​யோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அனைத்து மாவட்ட ஆட்​சியர்களும் திங்​கள்​கிழமைதோறும் குடிநீர் விநி​யோகத்தை ஆய்வு செய்து தொடர் கண்​காணிப்புப் பணிகளை மேற்​கொள்ள வேண்​டும்.

சென்னை மாநக​ராட்சி மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​கள் எதிர்​வரும் மழைக்​காலத்தை கருத்​தில் கொண்​டு, தூர்​வாரும் பணி​கள், வெள்​ளத்​தடுப்​புப் பணி​களை தொடங்க வேண்​டும். இவ்​வாறு அவர் அறிவுறுத்​தி​யுள்​ளார்.

கூட்​டத்​தில், தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார், துறை செயலர்​கள் ககன்​தீப்​சிங் பேடி ( ஊரக வளர்ச்​சி), தா.​கார்த்​தி​கேயன் (நக​ராட்சி நிர்​வாகம்), மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், குடிநீர் வாரிய மேலாண் இயக்​குநர் டி.ஜி.​வினய், நகராட்சி நிர்​வாகத் துறை இயக்​குநர் மதுசூதன் ரெட்​டி, ஊரக வளர்ச்சி ஆணை​யர் பி.பொன்​னை​யா, பேரூ​ராட்​சிகள் இயக்​குநர் பிரதீப் குமார், தமிழ்​நாடு குடிநீர் வடி​கால் வாரி​யத்​தின் மேலாண் இயக்​குநர் ஆனந்த்​மோகன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

மழைக்காலம் நெருங்குவதால் வெள்ளத்தடுப்பு பணிகளை தாமதமின்றி தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு ரூ.317 கோடி நிலுவை: மத்திய அரசிடம் பேச முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in