கேலோ இந்தியா அமைப்பு சார்பில் தென் மாநில அளவிலான மகளிர் சைக்கிள் போட்டி

5 மாநிலங்​களை சேர்ந்த 330 பெண்​கள் பங்​கேற்பு
கேலோ இந்தியா அமைப்பு சார்பில் தென் மாநில அளவிலான மகளிர் சைக்கிள் போட்டி
Updated on
1 min read

திருப்​போரூர்: கேலோ இந்​தியா அமைப்பு சார்​பில் தென் மாநில அளவி​லான மகளிர் சைக்​கிள் போட்​டிகள் திருப்​போரூரில் கடந்த 2 நாட்​களாக நடை​பெற்​றன. இதில், 5 மாநிலங்​களைச் சேர்ந்த 330 பெண்​கள் பங்​கேற்​றனர். போட்டிகளில் வென்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்​நாடு, கேரளா, கர்​நாட​கா, தெலங்​கா​னா, ஆந்​திரப் பிரதேச மாநிலங்​களைச் சேர்ந்த பெண்​கள் பங்​கேற்ற இப்​போட்​டிகளை கேலோ இந்​தியா அமைப்​பின் தென் மண்​டலப் பிரிவு நடத்​தி​யது. 14 வயது முதல் 16 வயதுக்கு உட்​பட்​டோர், 16 முதல் 18 வயதுக்கு உட்​பட்​டோர் மற்​றும் 18 வயதுக்கு மேற்பட்​டோர் என 3 பிரிவு​களாக போட்​டிகள் நடத்​தப்​பட்​டன. இதில் 5 மாநிலங்​களைச் சேர்ந்த 330 பெண்​கள் கலந்து கொண்​டனர்.

ரூ.1.38 லட்சம் பரிசு: இந்​தப் போட்​டிகளை தமிழ்​நாடு உடற்​கல்வி மற்​றும் விளை​யாட்​டுப் பல்​கலைக்​கழகப் பதி​வாளர் லில்லி புஷ்பம் கொடியசைத்து தொடங்​கி​வைத்​தார்.

வெற்​றி​பெற்ற வீராங்​க​னை​களுக்கு தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யப் பொது மேலா​ளர் எல். சுஜி​தா, கோட்​டாட்​சி​யர் மணி​கண்​டன் ஆகியோர் பதக்​கங்​கள் மற்​றும் பரிசுகளை வழங்​கினர். மொத்​தம் ரூ.1.38 லட்​சம் மதிப்​பிலான பரிசுத் தொகை வழங்​கப்​பட்​டது. இந்த நிகழ்ச்​சி​யில், தமிழ்​நாடு சைக்​கிள் சங்​கத் தலை​வர் எம்​. சு​தாகர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

கேலோ இந்தியா அமைப்பு சார்பில் தென் மாநில அளவிலான மகளிர் சைக்கிள் போட்டி
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்: ஜன. 17-ல் முதல்வர் திறந்துவைக்கிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in