உயர் பதவிகளில் உள்ள பெண்களும் பணியிட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்: நீதிபதிகள் வேதனை

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்.

Updated on: 
2 min read

மதுரை: தொழில் மற்​றும் உயர் பத​வி​களில் உள்ள பெண்​கள் கூட பணி​யிடப் பாலியல் துன்​புறுத்​தலுக்கு ஆளாகின்​றனர். ஆண்​கள் சக பெண் ஊழியர்​களை மதித்து நடந்​து​கொள்ள வேண்​டும் என உயர் நீதி​மன்ற நீதிபதி எல். விக்​டோரியா கெளரி கூறினார்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் பாலின உணர்​திறன் மற்​றும் உள் புகார் குழு சார்​பில், பணி​யிடங்​களில் பெண்​களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்​பான விழிப்​புணர்வு நிகழ்ச்சி, மதுரை டோக் பெரு​மாட்டி கல்​லூரி​யில் நேற்று நடை​பெற்​றது.

பாலின உணர்​திறன் மற்​றும் உள் புகார் குழுத் தலை​வர் நீதிபதி விக்​டோரியா கௌரி தலைமை வகித்​தார். அவர் பேசுகை​யில், பணி​யிடங்​களில் பெண்​களுக்கு எதிரான பாலியல் துன்​புறுத்​தல்​கள் எந்த அளவிற்​குப் பரவலாக உள்​ளன என்​பதை விளக்​கினார். அப்​போது சாதா​ரண கிராமப்​புற ஊழியர்​கள் முதல் உயரிய ஐ.ஏ.எஸ் அதி​காரி​கள் வரை யாரும் இதற்கு விதி​விலக்​கல்ல என்​றும், தற்​போது கள்​ளக்​குறிச்சி மாவட்ட ஆட்சி​யர் பத்​மஜாவுக்கு, பத​வி​யில் இருக்​கும் ஒரு எம்.எல்.ஏ ஆபாச செய்​தி​களை அனுப்​பியுள்​ளார்.

இது​வும் பணி​யிடத்​தில் நடை​பெறும் ஒரு வகை​யான பாலியல் துன்​புறுத்​தல்​தான். இது தொடர்​பாக மாவட்ட ஆட்​சி​யரின் கணவர் காவல்​துறை​யில் புகார் அளித்​தும், இன்​று​வரை காவல்​துறை எந்த நட​வடிக்​கையும் எடுக்​க​வில்லை. உயர் பத​வி​யில் இருக்​கும் ஒரு மாவட்ட ஆட்​சி​யருக்கே இந்த நிலைமை என்​றால், சாதா​ரணப் பெண்​களின் பாது​காப்பு கேள்​விக்​குறி​யாகவே உள்​ளது.

பணி​யிடங்​களில் பெண்​கள் பாது​காப்​பாகவும், கண்​ணி​யத்​துடனும் பணி​யாற்​று​வதை உறுதி செய்ய அனைவருக்​கும் விழிப்​புணர்வு அவ​சி​யம் என்​றார்.

இந்​நிகழ்ச்​சி​யில் முன்​னிலை வகித்த நீதிபதி ஆர்.பூர்​ணிமா பேசுகை​யில், பெண்​கள் துணிச்​சல், மனவலிமை, விடா​முயற்சி மற்​றும் சாதனை​யின் அடை​யாளங்​கள். பணி​யிடங்​களில் பெண்​களின் பாது​காப்பு, கண்​ணி​யம் மற்​றும் உரிமை​களை உறுதிப்​படுத்​து​வது ஓர் அமைப்​பின் கடமை மட்​டும் அல்ல. ஒட்டு மொத்த சமூகத்​தின் அடிப்​படைக் கடமையாகும் என்​றார்.

விழிப்​புணர்வு நிகழ்ச்​சி​யைத் தொடங்கி​வைத்து நீதிபதி அனிதா சுமந்த் பேசிய​தாவது: பெண்​களை தெய்​வ​மாக வழிபடும் நாம் அன்​றாட வாழ்க்​கை​யில் அவர்​களுக்​குரிய மரியாதை, கண்​ணி​யத்தை வழங்​கத் தவறி விடு​கிறோம். ஒவ்​வொரு பெண்​ணும் ராணி லட்​சுமிபாய் அல்​லது வேலு நாச்​சி​யாராக மாற வேண்​டிய அவ​சி​யமில்லை.

மாறாக, தங்​களது தனித்​து​வ​மான அடை​யாளத்​துடன் தன்​னம்​பிக்​கையோடும், சுய மரியாதையோடும் வாழ வேண்​டும். பணி​யிடங்​களில் பாலின வேறு​பாடின்றி ஒவ்​வொரு​வரும் மற்​றவர்​களின் தனிப்​பட்ட இடம், உரிமை​கள் மற்​றும் கண்​ணி​யத்தை மதிக்க வேண்​டும். பதவி அதி​காரத்​தைப் பயன்​படுத்தி யாருக்​கும் பிரச்​சினைகளை கொடுக்​கக்​கூடாது என்​றார்.

நீதிபதி ஜெகதீஷ் சந்​திரா பேசுகை​யில், ஒரு​வர் சாதா​ரண​மாக கருதிப் பேசும் வார்த்​தைகள், நகைச்​சுவை, சைகை அல்​லது உடல் மொழிகூட மற்​றொரு​வருக்கு மன உளைச்​சலையும், அசௌகரியத்​தையும் ஏற்​படுத்​தக் கூடும்.

பணி​யிடங்​களில் பெண்​கள் எதிர்​கொள்​ளும் பாலியல் துன்​புறுத்​தல்​கள், இறுதி​யில் பணி​யிடத்தை விட்டு வெளியேறும் நிலைக்​குத் தள்​ளக்​கூடும். ஆண்​களும், பெண்​களும் தங்​கள் தனிப்​பட்ட எல்லைகளை மதித்து கண்​ணி​யத்​தோடும், மனித நேயத்​தோடும், பரஸ்பர மரியாதையோடும் நடந்​து​கொள்​வதன் மூலம் பாது​காப்​பான மற்​றும் அமைதி​யான பணிச்​சூழலை உரு​வாக்க முடியும்.

ஒவ்​வொரு ஆணும் தனது தாய், சகோ​தரி அல்​லது மனைவிபணிபுரியும் இடத்​தில் மற்​றவர்​கள் அவர்​களை எவ்​வாறு கண்​ணி​யத்​துடன் நடத்த வேண்​டும் என எதிர்​பார்க்​கிறாரோ, அதே மரியாதையை தன்​னுடன் பணிபுரியும் பெண் ஊழியர்​களுக்​கும் வழங்க வேண்​டும் என்​றார்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பேசுகை​யில், பெண்​களை எவ்​வாறு மதித்து நடத்த வேண்​டும் என்​பதை ஆண்​களுக்​கும் கற்​பிக்க வேண்​டும். அன்பு, பாசம் மற்​றும் நம்​பிக்​கைக்கு பாலின வேறு​பாடு கிடை​யாது. போர் மற்​றும் மோதல் ஏற்​படும் சூழல்​களில் பெண்​களே பெரும்​பாலும் பாதிக்​கப்​படுவோராகவும், குறி வைக்​கப்​படுவோராகவும் உள்​ளனர் என்​றார்.

நிறைவு நிகழ்ச்​சி​யில் நீதிப​தி​கள் ஆர்.விஜயகுமார், கே.கே.ராமகிருஷ்​ணன் ஆகியோர் பேசினர். பல்​வேறு தலைப்​பு​களில் நான்கு அமர்​வு​களில் விழிப்​புணர்வு நிகழ்ச்சி நடந்​தது. இதில் ஓய்வு டிஎஸ்பி சுனந்​தாபாகவதி, வழக்​கறிஞர் பி.பாபு, டாக்​டர் சுகந்தா ராமமூர்த்தி, வழக்​கறிஞர் கே.சாமிதுரை, ஓய்வு நீதிபதி ஆர்.என்.மஞ்​சுளா, வழக்​கறிஞர் எஸ்.மகேஷ் பாபு ஆகியோர் பேசினர். கல்​லூரி முதல்​வர் பியூலாஜெய, உள்​பு​கார் குழு உறுப்​பினர்​கள், வழக்​கறிஞர்​கள் பங்​கேற்​றனர். வழக்​கறிஞர் என்.இளங்கோ நன்றி கூறினார்.

<div class="paragraphs"><p>பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்.</p></div>
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் என்ன முடிவெடுக்க போகிறது அரசு? - எதிர்பார்ப்பில் இந்து அமைப்புகள், மக்கள்; குழப்பத்தில் அதிகாரிகள்

X