திருப்பரங்குன்றம் விவகாரத்தில் என்ன முடிவெடுக்க போகிறது அரசு? - எதிர்பார்ப்பில் இந்து அமைப்புகள், மக்கள்; குழப்பத்தில் அதிகாரிகள்

பரபரப்பு காட்டாத மதுரை ஆட்சியர், காவல் ஆணையர்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் என்ன முடிவெடுக்க போகிறது அரசு? - எதிர்பார்ப்பில் இந்து அமைப்புகள், மக்கள்; குழப்பத்தில் அதிகாரிகள்
Updated on: 
2 min read

மதுரை: திருப்​பரங்​குன்​றம் மலை உச்சி தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்ட நிலை​யில், இந்து அமைப்​பினர், பொது​மக்​களிடையே பெரும் எதிர்​பார்ப்பு நில​வு​கிறது.

கடந்த ஆண்டு திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது. அந்த உத்​தரவை நிறைவேற்​றாமல், மாவட்ட நிர்​வாகம் திருப்​பரங்​குன்​றத்​தில் 144 தடை​யாணை பிறப்​பித்​தது. இத​னால் அப்​போதைய ஆட்சி​யர், காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர் ஆகியோர் மீது நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டது.

கார்த்​தி​கை​யின் 2-வது நாளன்று மத்​திய தொழிலக பாது​காப்பு படை​யினர் பாது​காப்​புடன் வழக்கு தொடர்ந்​தவர்​கள் தீபத்​தூணில் தீபம் ஏற்ற நீதிபதி உத்​தர​விட்​டார். அதன்​படி, தீபம் ஏற்​றச் சென்​றவர்​களை மலைப் படிக்​கட்​டில்​கூட கால் வைக்க போலீ​ஸார் அனுமதிக்​க​வில்லை.

இத​னால் 2-வது நாளி​லும் தீபம் ஏற்ற முடி​யாமல் போனது. இந்த நட​வடிக்​கை​யால் அப்​போதைய காவல் துணை ஆணை​யர் இனிகோ திவ்​யன் மீதும் நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது. நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்​கில் ஆட்சி​யர், காவல் ஆணை​யர் உள்​ளிட்ட அதி​காரி​கள் நீதி​மன்​றத்​தில் மன்​னிப்பு கோரினர்.

தற்​போது, இந்த ஆண்டு மட்​டும் தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால உத்​தரவு வழங்​கி​யுள்​ளது. தீபத்​தூணில் தீபம் ஏற்​றும் பொறுப்பை மாவட்ட ஆட்​சி​யரிடம் வழங்​கி​யுள்ள உச்ச நீதி​மன்​றம், மாநகர் காவல் ஆணை​யர் போது​மான பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும். தேவைப்​பட்​டால் மத்​திய படை​யின் பாது​காப்பை கோரலாம் என்று அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இத​னால் உச்ச நீதி​மன்ற தீர்ப்பை நிறைவேற்​றி​யாக வேண்​டிய கட்​டாயத்​துக்கு மாவட்ட நிர்​வாகம் தள்​ளப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்டு நீதி​மன்​றத் தீர்ப்பை செயல்​படுத்​தாமல் அவ​மதிப்பு நட​வடிக்​கையை எதிர்​கொண்டு, பகிரங்​க​மாக மன்​னிப்பு கோரியது போல் இந்த முறை நடந்​து​கொள்ள மாவட்ட நிர்​வாகமும், காவல்​துறையும், அதி​காரி​களும் தயாராக இல்லை. இடைக்​கால உத்​தரவுபடி ஒரு நாள் தீபம் ஏற்​றி​விட்டு, வழக்​கின் இறுதி​யில் பார்த்​துக் கொள்​ளலாம் என்ற மன​நிலை​யில் அதி​காரி​கள் உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

கார்த்​திகை தீபத்​திருநாளுக்கு இன்​னும் 1 நாள்​தான் உள்​ளது. இருப்​பினும் உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பை நிறைவேற்​று​வது தொடர்​பாக மாவட்ட ஆட்சி​யர், கோயில் நிர்​வாகம் தரப்​பில் நேற்று இரவு வரை முன்​னேற்​பாடுகளை செய்​ய​வில்லை. இத​னால் திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​றும் விவகாரத்​தில் மாவட்ட நிர்​வாகம் என்ன செய்​யப் போகிறது என எதிர்​பார்த்து மதுரை மக்​கள் காத்​திருக்​கின்​றனர்.

இது​குறித்து ஆட்சி​யர் அலு​வலக அதி​காரி​கள் சிலர் கூறும்​போது, “தமிழக அரசு, தீபத்​தூண் வழக்​கில் சீராய்வு மனு தாக்​கல் செய்​வது தொடர்​பாக ஏற்​பாடுகள் நடப்​ப​தாக கூறினாலும், இன்​னும் தெளிவான முடிவெடுக்​க​வில்லை. இந்த விவகாரத்​தில் அரசின் ஆலோ​சனையை பின்​பற்​று​வதா? உச்ச நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​று​வதா? என்ற குழப்​பத்​தில் ஆட்சி​யர் உள்​ளார்” என்​றனர்.

உச்ச நீதி​மன்ற உத்​தரவுப்​படி தீபம் ஏற்ற மாவட்ட நிர்​வாகம் முடிவெடுத்​தால், தீபம் ஏற்​றப்​படும் இடத்தை மாவட்ட ஆட்சி​யர் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​வார். ஆனால், இது​வரை அவர் திருப்​பரங்​குன்​றம் செல்​ல​வில்லை. காவல் ஆணை​யர் சட்​டப்​படி செயல்​படவே விரும்​புவ​தாக மேலிடத்​திடம் தெரி​வித்​து​விட்​டார்.

உச்ச நீதி​மன்ற அவ​மதிப்​புக்கு உள்​ளானால் தங்​களின் பத​வியை காப்​பாற்ற யாராலும் முடி​யாது என்​ப​தால், அத்​தகைய முடிவை ஏன் எடுக்க வேண்​டும் என உயர் அதி​காரி​கள் கருதுகின்​றனர். அரசின் திட​மான வழிகாட்​டுதல், ஆலோ​சனை இல்​லாமல் ஆட்சி​யர், காவல் ஆணை​யர் பெரும் குழப்​பத்​தில் உள்​ள​தாகவும் தகவல் வெளியாகி​யுள்​ளது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் என்ன முடிவெடுக்க போகிறது அரசு? - எதிர்பார்ப்பில் இந்து அமைப்புகள், மக்கள்; குழப்பத்தில் அதிகாரிகள்
கொளத்தூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? - அண்ணா அறிவாலயத்தில் தீவிர ஆலோசனை

X