மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 மார்ச் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 மார்ச் 2026
Updated on
2 min read

மேஷம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ரிஷபம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். ஊர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது. உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்: மறைமுக எதிர்ப்புகள், தடைகள் விலகும். உங்களின் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

சிம்மம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செயல்படவும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு உண்டு. உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு, டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். குழப்பங்கள் தீர்ந்து அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்கள்.

விருச்சிகம்: புது முயற்சிகளில் ஈடுபடுவீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபார போட்டிகளை சமாளிப்பீர். புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.

தனுசு: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பேச்சில் தெளிவு பிறக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரியின் ஆதரவையும் பாராட்டையும் பெறுவீர்கள்.

மகரம்: அணுகுமுறையை மாற்றி தடைபட்ட பணியை முடிப்பீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். சகோதரியின் விருப்பத்தை நிறைவேற்ற போராடுவீர்கள். வியாபாரரீதியாக பயணம் மேற்கொள் வீர்கள். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

கும்பம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். பிள்ளைகளின் படிப்பு, வேலை தொடர்பான அலைச்சல் இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி இப்போது வேண்டாம்.

மீனம்: சாதுர்யமாகப் பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். அக்கம்பக்கத்தினர் ஆதரவு தருவர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 மார்ச் 2026
ஜோதிட நாள்காட்டி 05.03.2026 | மாசி 21 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in