காரைக்குடியில் இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் பேசிய பெண்ணுக்கு அவமரியாதை

காரைக்குடியில் இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் பேசிய பெண்ணுக்கு அவமரியாதை
Updated on: 
1 min read

காரைக்குடி: காரைக்குடியில் தனது கணவரான இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருடன் பேசிய இளம்பெண் மீது சாணியை ஊற்றி, துடைப்பத்தால் அடித்து அவமரியாதை செய்ததாக 3 பெண்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி திலகர் நகரைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (20). இவர் கணேசபுரத்தைச் சேர்ந்த அபிநயாவின் (23) கணவர் கவியரசனிடம் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. எனவே கவியரசன் அபிநயாவிடம் பேசுவதில்லை.

நேற்று முன்தினம் ஜெயஸ்ரீ தனது தோழியுடன் காரைக்குடி 100 அடி சாலையில் சூடாமணிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை அபிநயா, அவரது சகோதரி அருணாதேவி (27), தோழி பிரியா (30) ஆகியோர் வழிமறித்தனர்.

தொடர்ந்து, அவர்கள் ஜெயஸ்ரீ மீது சாணியை கரைத்து ஊற்றியதுடன், அவதூறாக பேசி, துடைப்பத்தால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலரது முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக ஜெய அளித்த புகாரின் பேரில் அபிநயா, அருணாதேவி, பிரியா ஆகியோர் மீது காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

காரைக்குடியில் இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் பேசிய பெண்ணுக்கு அவமரியாதை
மக்கள் நலனுக்காகத்தான் மோடியுடன், விஜய் இணைந்து பணியாற்றுகிறார்: அமைச்சர் செங்கோட்டையன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in