‘தங்க மோதிரம்’ திட்டம் தாக்கம்: அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்படுமா?

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
2 min read

மதுரை: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தால் பிரசவங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசு மருத்துவமனைகளில் தாய், சேய் நலத்தை பாதுகாக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் மகப்பேறு மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மகப் பேறு மருத்துவர் பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும், அதன்மூலம் நடுத்தர, ஏழைக் குடும்பங்களில் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனைகளில் செலவினத்தைக் குறைப்பதும் இந்தத் திட்டத்தின் மற்றொரு பிரதான நோக்கமாக கூறப்படுகிறது.

ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மகப்பேறு மருத்துவர் பற்றாக்குறையை போக்கவும், மகப்பேறு கட்டமைப்பு வசதிகள், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பை உறுதிப்படுத்தாமலும், அவசர கோலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது, ஏற்பு டையது அல்ல என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவ மனைகளின் மகப்பேறு மருத்து வர்கள் கூறியதாவது: பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலமே குழந்தைகள் பிறப்பு நடக்கிறது. அதனால், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் லேசான சிக்கல், அச்சம் ஏற்பட்டாலே அந்த மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு கர்ப்பிணிகளை அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

இதில் 20 சதவீத பிரசவங்கள் பல்வேறு நோய் உள்ளவர்களுக்கும், ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கும் பார்க்கப்படுகின்றன. அதில் சில நேரம், துரதிருஷ்டவசமாக சில உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங்களுக்கு தகுந்தவாறு மகப்பேறு மருத்துவர்கள், பச்சிளம் குழுந்தைகள் மருத்துவ ர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாத நிலையில், கூடுதல் முழு பொறுப்பாக அரசு மருத்துவமனைகளில் தற்போது தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் முழுமையாக ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பலன் பெறுவதற்காக, இதுவரை பிரசவத்துக்காக தனியார் மருத்துவ மனைகளுக்கு சென்ற குடும்பத்தினர் கூட கர்ப்பிணி பெண்களை இனி அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவார்கள் என்று கூறினர்.

மதுரை கே.கே.நகரை சேர்ந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் ஆனந்த்ராஜ் கூறியதாவது: தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன.

18 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 2,078 தாலுகா மருத்துமனைகள், 482 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 1,804 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. சராசரியாக நாளொன்றுக்கு, இந்த மருத்துவமனைகளில் 1,500 பிரசவங்கள் நடக்கின்றன.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சராசரியாக தற்போது நாளொன்றுக்கு 300 பிரசவங்களும், தாலுகா மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் 500 பிரசவங் களும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 800 பிரசவங் களும் நடக்கின்றன.

மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 45 பிரசவங்கள் நடக் கின்றன. சராசரியாக தமிழகத்தில் ஆண்டுக்கு 5 லட்சத்து 47 ஆயிரத்து 500 பிரசவங்கள் நடக்கின்றன. தங்க மோதிரம் திட்டத்தில் மோதிரங்களை அரசு மருத்துவமனைகளில் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் கட்டுப்பாட்டில் பயனாளிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்க மோதிர திட்டம், நல்ல நோக்கமும், பாராட்டுக்கும் உரியதுதான். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, அரசு மருத்துவமனைகளின் மகப்பேறு சிகிச்சை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவிட்டு, திட்டத்தை செயல்படுத்தி இருக் கலாம். கரோனாவுக்கு பிறகு அரசு மருத்துவமனைகளில் 20 முதல் 30 சதவீதம் பிரசவங்கள் அதிகரித்துள்ளன.

தற்போது தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தால், மேலும் பிரசவங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்த திட்டத்தில் உயிர் சம்பந்தமான சிக்கல்களும் உள்ளதால் அரசு, முழுக்கவனம் செலுத்தி அரசு மருத்துவமனைகளில் உடனடியாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
காமன்வெல்த் விளையாட்டு: பதக்கங்களை வென்று குவிக்குமா இந்திய படை?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in