விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கோட்டையை தகர்க்குமா பாஜக?

விளவங்கோடு பகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர் விஜயதரணி.

விளவங்கோடு பகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர் விஜயதரணி.

Updated on
2 min read

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமாக விளங்கும் மார்த்தாண்டத்தையும், கேரள எல்லையான களியக்காவிளையையும், அருமனை, சிற்றாறு, ஆறுகாணி போன்ற மலை கிராமங்களையும் உள்ளடக்கியது விளவங்கோடு தொகுதி. மலையாள மொழி பேசும் மக்கள் இத்தொகுதியில் நிறைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் குறைந்த வாக்குகள் கொண்ட தொகுதி. 2,26,658 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில் நாடார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இது தவிர நாயர், ஈழவர், செக்காளர், காணி மலை ஜாதியினர் மற்றும் கிறிஸ்தவ, முஸ்லிம், பட்டியலின மக்கள் பரவலாக உள்ளனர்.

4-வது முறையாக விஜயதரணி

விளவங்கோட்டில் 1971ல் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்னப்பநாடார் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரானார். 1984, 1989. 1991 ஆகிய தேர்தல்களில் தொடர்ச்சியாக 3 முறை காங்கிரசின் சுந்தரதாஸ் வெற்றிபெற்றார்.

அச்சாதனையை 2011, 2016, 2021 ஆகிய 3 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்று விஜயதரணி சமன் செய்தார். தற்போது விஜயதரணி பாஜக வேட்பாளராக களம் காண்கிறார்.

விளவங்கோடு தொகுதியை பற்றியும், இங்குள்ள மக்களை பற்றியும் நன்கு அறிந்து வைத்துள்ள விஜயதரணி, மார்த்தாண்டம் நகர பகுதிகளில் இருந்து மலைகிராமங்கள் வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இங்குள்ள இந்து வாக்குகள் மற்றும் கேரள எல்லை பகுதியில் உள்ள வாக்குகளும் தமக்கு கைகொடுக்கும் என நம்புகிறார்.

அதிருப்தியை சமாளித்த பிரவீன்

காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள தொழிலதிபர் பிரவீன், விளவங்கோடு தொகுதியைச் சேர்ந்தவர் என்றாலும், கேரளாவில் வசிப்பதால், தொகுதி மக்களுக்கு புதியவர். சிஎஸ்ஐ அமைப்பில் முக்கிய நிர்வாகியாக உள்ளார்.

ஆறுகாணி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் வாக்கு சேகரிக்கிறார்.

ஆறுகாணி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் வாக்கு சேகரிக்கிறார்.

இவரை வேட்பாளராக அறிவித்த போது, விளவங்கோடு தொகுதி காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், நிர்வாகிகளுடன் கட்சி தலைமை பேசி சமரசம் செய்தது. தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸார் ஒருங்கிணைந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிஎஸ்ஐ கிறிஸ்தவ வாக்குகள் தனக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறார்.

இளைஞர்களை நம்பி தவெக

தவெக வேட்பாளர் மைக்கேல் குமார் திமுகவில் இருந்து வந்தவர் என்பதால், விளவங்கோடு தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர்.

களியக்காவிளை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மைக்கேல் குமார்.

களியக்காவிளை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மைக்கேல் குமார்.

தவெகவின் விஜய் ஆதரவு வாக்குகள், இளைஞர்களின் வாக்குகள் அதிக அளவில் கிடைக்கும் என்றும், திமுகவில் உள்ள தனது ஆதரவு வாக்குகளையும் பெற்றுவிடலாம் என்றும் மைக்கேல் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரவு, பகலாக அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

நம்பிக்கையுடன் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஸ்டெல்லா, கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தலை தடுத்தல், கேரளாவில் இருந்து கழிவு பொருட்களை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டுவதை தடுத்தல், மலைவளங்களை பாதுகாத்தல் போன்றவற்றை வாக்குறுதியாக கொடுத்து, விளவங்கோடு தொகுதியின் வளங்களை பாதுகாப்பதாக கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார். இத்தொகுதியில் முந்தைய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஸ்டெல்லா.

தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஸ்டெல்லா.

விளவங்கோட்டில் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் இந்த நான்குமுனை போட்டியாளர்கள் அதிதீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனாலும், விளவங்கோடு தொகுதியை காங்கிரஸ் மீண்டும் தக்க வைக்குமா? அல்லது காங்கிரசிடம் இருந்து பாஜக கைப்பற்றுமா? என்பது தான் போட்டியாக உள்ளது.

தொகுதியின் எதிர்பார்ப்புகள்

விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட மலையோர கிராமங்கள், தனியார் வன பாதுகாப்பு சட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குழித்துறை தாமிரபரணி ஆற்றில் படகு போக்குவரத்து தொடங்க வேண்டும்.

மார்த்தாண்டம் தேன் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் சத்துணவு மற்றும் அரசின் பிற ஊட்டச்சத்து தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். தேன் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

மார்த்தாண்டம் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ரப்பர் தொழிற்சாலை அமைக்க வேண்டும். பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும். சிற்றாறு, களியல் போன்ற பகுதிகளை மையப்படுத்தி சூழலியல் சுற்றுலா மையம் அமைக்க வேண்டும் என்பன, விளவங்கோடு தொகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளன.

வாக்காளர்கள் விவரம்

• ஆண்கள்: 1,12,612.

• பெண்கள்: 1,14,043

• இதரர்: 3

• மொத்தம்: 2,26,658

விளவங்கோடு பகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர் விஜயதரணி.

Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in