மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவியை போலீஸ் தாக்கியதில் காயம்

மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவியை போலீஸ் தாக்கியதில் காயம்
Updated on
2 min read

சென்னை: சென்​னை​யில் நடந்த போராட்​டத்​தில் கைது செய்​யப்​பட்ட மாற்​றுத்திற​னாளி​கள் உணவு, தண்​ணீர் இல்​லாமல் அலைக்​கழிக்​கப்​பட்​டதுடன், போலீ​ஸார் தாக்​கிய​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சியின் மூத்த தலை​வர் கே.​பால​கிருஷ்ணனின் மனைவி ஜான்​சிராணி காயமடைந்து மருத்​து​வமனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். இதற்கு பல்​வேறு அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

ஆந்​தி​ராவைப் போல மாற்​றுத் திற​னாளி​களுக்​கான மாதாந்​திர பராமரிப்பு தொகையை உயர்த்தி வழங்​கவேண்​டும் உட்பட பல்வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தமிழ்​நாடு அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை சங்​கம் சார்​பில் மாநிலம் முழு​வதும் காலவரையற்ற மறியல் போராட்​டம் கடந்த 10-ம் தேதி முதல் நடை​பெற்று வரு​கிறது.

சென்​னை​யில் 3 நாட்​களாக போராட்​டம் நடை​பெற்று வந்​தது. அதன் தொடர்ச்​சி​யாக நேற்று முன்தினமும் போராட்டம் தொடர்ந்தது. இதில் சங்​கத்தின் தலை​வர் தோ.​வில்​சன், பொதுச்​செய​லா​ளர் பா.ஜான்​சி​ராணி உள்பட 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்டு எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அழைத்துச் செல்​லப்​பட்​டனர். பின்​னர் இரவு 7 மணி​யள​வில் அங்​கிருந்து திரு​மங்​கலத்​தில் உள்ள சமு​தாய ​கூடத்​துக்கும் கிளாம்​பாக்​கத்துக்கும் கொண்டு சென்றனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கவே நள்​ளிரவு 2 மணிக்கு கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​தில் அவர்களை போலீ​ஸார் விட்​டு​விட்​டுச் சென்​றனர்.

இதற்​கிடையே இருந்த சங்​கத்​தின் மாநில தலை​வர்​கள் உள்பட 40 பேரை காவல்​துறை​யினர், நள்​ளிரவு 1 மணி​யள​வில் வலுக்​கட்​டாய​மா பேருந்​துகளில் ஏற்​றினர். அப்​போது சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பா.ஜான்​சி​ ராணியை குண்​டுக்​கட்​டாக தூக்கி ஏற்​றிய​தில், அவருக்கு காயம் ஏற்​பட்​டு, மயக்​கமடைந்​தார். பின்னர் ஆம்​புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்​து​வமனையில் சேர்க்​கப்​பட்டு சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. ஜான்​சி​ராணி, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் கே.​பால​கிருஷ்ணனின் மனைவியாவார்.

இதன்தொடர்ச்சியாக இச்​சம்​பவத்​தைக் கண்​டித்து சங்​கத்​தின் சார்​பில் கோயம்​பேட்​டில் மறியல் நடை​பெற்​றது. இச்​சம்​பவத்​துக்கு தலை​வர்கள் கண்​டனம் தெரி​வித்​தனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: காவல்​துறை​யின் ஈவு இரக்​கமற்ற தாக்​குதலில் திமுக கூட்​டணிக் கட்​சி​யான மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலைவர் மனைவி படு​காயமைடைந்து மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். கோரிக்​கைக் குரல்​களை ஒடுக்க நினைப்​பது​ திமுக​வின் பாசிச மனோ​பாவத்​துக்​கான சாட்​சி. இந்தத் தாக்​குதல்​கள் கண்​டனதுக்​குரியது.

மார்க்​சிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: தண்​ணீரோ, உணவோ வழங்​காமல் மாற்​றுத்​திற​னாளி​களை அலைக்​கழித்​து, தாக்கி சித்​ர​வதை செய்து காவல்​துறை மனித உரிமை மீறலில் ஈடு​பட்​டுள்​ளது. இந்த மோசமான நடவடிக்​கைகளுக்கு காரணமான போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இதேபோல், பாமக தலை​வர் அன்​புமணி, தமாகா தலைவர் ஜி.கே.​வாசன், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் ஆகியோரும் மாற்றுத் திறனாளிகள் மீதான போலீஸாரின் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் வாபஸ்: இதற்​கிடையே மே மாதம் மீண்​டும் ஆட்​சிக்கு வந்த உடனே பாரமரிப்​புத் தொகை உயர்த்​தப்​படும் என முதல்​வர் வாக்​குறுதி அளித்​திருப்​ப​தாக அமைச்​சர் கீதா ஜீவன் கூறியதன் அடிப்​படை​யில் போராட்​டம் தற்​காலிக​மாக முடிவுக்கு வரு​வ​தாக சங்​கத்​தினர் தெரி​வித்​தனர்.

மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவியை போலீஸ் தாக்கியதில் காயம்
ரமலான் நோன்பு இன்று முதல் தொடக்கம்: அரசு தலைமை காஜி உஸ்​மான் மொய்​தீன் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in