சென்னை, புறநகர் பகுதிகளில் பரவலாக மழை: காற்று மாசு குறைந்தது

சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சேப்பாக்கத்தில் மழையில் நனைந்தபடி சென்ற வாகன ஓட்டிகள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சேப்பாக்கத்தில் மழையில் நனைந்தபடி சென்ற வாகன ஓட்டிகள். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on: 
1 min read

சென்னை: சென்னை மாநகர் மற்​றும் புறநகர் மாவட்​டங்​களில் கடந்த இரு வாரங்​களாக கடும் பனிப்​பொழிவும், மழையின்றி வறண்டு காணப்​பட்​டது.

இதன் காரண​மாக கடந்த இரு வாரங்​களாக மாநகர், புறநகர் பகுதி​களில் காற்று மாசு அதி​கரித்​தது. இத​னால், பொது​மக்​கள் ஒவ்​வாமையால் ஏற்​படும் தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல், சளித்​தொல்லை போன்​றவற்​றால் அவதிப்​பட்டு, சிகிச்சை பெற்று வந்​தனர்.

இந்​நிலை​யில் தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை மீண்​டும் தீவிரமடைந்த நிலை​யில், நேற்று அதி​காலை முதல் ஆங்​காங்கே மழை பெய்து வந்​தது. பின்​னர் பிற்​பகல் வரை வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​டது.

பின்​னர் பிற்​பகல் 2 மணிக்கு மேல் லேசான மழை பெய்​யத் தொடங்​கியது. தொடர்ந்து விட்​டுவிட்​டுப் பெய்து வந்த மழை, இர​வில் பரவலாக மித​மான மழை பெய்​தது.

மழையால் தியாக​ராயநகர், கிண்டி, அண்ணா சாலை, வேளச்​சேரி, அடை​யாறு, வால்​டாக்ஸ் சாலை, பூந்​தமல்லி நெடுஞ்​சாலை உள்​ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்​கிய​தால் வாக​னங்​கள் மெது​வாக ஊர்ந்து சென்​றன.

கடந்த ஒரு வார​மாக சென்னை, புறநகரில் கடும் காற்று மாசு நில​வியது. கடந்த வெள்ளி, சனிக்​கிழமை​களில் காற்று மாசு அனுமதிக்​கப்​பட்ட அளவான காற்​றுத்​தரக் குறியீடு 100-ஐ கடந்து 200-க்கு மேல் பதிவானது.

கடந்த வாரத்​தில் இதர 5 நாட்​களில் 100-க்கு மேல் பதிவாகி காற்​றின் தரம் மோச​மான நிலை​யில் இருந்​தது. இந்​நிலை​யில் நேற்று பரவலாக மழை பெய்த நிலை​யில், காற்​றின் தரம் 100-க்கு கீழ் 75 ஆக திருப்​தி​கர நிலைக்குக் குறைந்தது.

9 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடலிலிருந்து மத்தியமேற்கு வங்கக்கடல் வரை சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

வடக்கு கேரளாவிலிருந்து கர்நாடகா வரை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இதர 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

<div class="paragraphs"><p>சென்னையில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சேப்பாக்கத்தில் மழையில் நனைந்தபடி சென்ற வாகன ஓட்டிகள். | படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
காவிரி விவசாயிகள் கருத்துகளை கேட்க திமுக சார்பில் குழு அமைப்பு

X