தேர்தலுக்கு முந்தைய நாள் இரவில் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் புறப்பட தாமதம் ஏன்? - போக்குவரத்து துறை விளக்கம்

தேர்தலுக்கு முந்தைய நாள் இரவில் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் புறப்பட தாமதம் ஏன்? - போக்குவரத்து துறை விளக்கம்
Updated on
1 min read

சென்னை: தேர்​தலுக்கு முந்​தைய நாள் இரவில் சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து வெளியூர்​களுக்கு பேருந்​துகள் புறப்​பட்​டுச் செல்​வ​தில் ஏற்​பட்ட தாமதம் குறித்து போக்​கு​வரத்து துறை விளக்​கம் அளித்​துள்​ளது. தேர்​தலை​யொட்டி சென்​னை​யில் இருந்து இயக்​கப்​பட்ட 10,637 பேருந்​துகளில் 6.25 லட்​சம் பேர் பயணம் செய்​த​தாக​வும் தெரி​வித்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. இதையொட்​டி, சொந்த ஊரில் வாக்​களிப்​ப​தற்​காக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இருந்து பல லட்​சம் பேர் பேருந்​துகள், ரயில்​கள், சொந்த வாக​னங்​களில் புறப்​பட்​டுச் சென்​றனர்.

பேருந்​துகள், ரயில்​களில் முன்​ப​திவு செய்​யாதவர்​களும், திடீரென பயணத்தை திட்​ட​மிட்​ட​வர்​களும் முந்​தைய நாளான 22-ம் தேதி இரவு சென்னை கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​துக்கு வந்​தனர். ஆனால், அங்​கிருந்து திருச்​சி, மதுரை, கோவை, நெல்லை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களுக்கு போதிய பேருந்​துகள் இயக்​கப்​ப​டாத​தால் பயணி​கள் கடும் அவதி​யடைந்​தனர். குழந்​தைகள், பெண்​கள் விடிய விடிய பேருந்து நிலை​யத்​திலேயே காத்​திருக்​கும் நிலை ஏற்​பட்​டது. இதனால், பயணி​கள் சாலை மறியலிலும் ஈடு​பட்​டனர். மறு​நாள் காலை 9 மணிக்​குப் பிறகே நிலைமை சீரடைந்​தது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் கூறிய​தாவது: கடந்த 21-ம் தேதி வழக்​க​மான 2,092 பேருந்​துகள், கூடு​தலாக 1,339 சிறப்பு பேருந்​துகள் என மொத்​தம் 3,431 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டு, 1.89 லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்​டனர். 22-ம் தேதி முதல் 23-ம் தேதி நண்​பகல் 12 மணி வரை, வழக்​க​மான 3 ஆயிரம் பேருந்​துகள், கூடு​தலாக 4,206 சிறப்பு பேருந்​துகள் என மொத்​தம் 7,206 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டு, 4.38 லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்​டனர். அந்த வகை​யில், 21-ம் தேதி முதல் 23-ம் தேதி காலை 6 மணி வரை, மொத்​தம் 10,637 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டு, 6.25 லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்​டனர். எனவே, பேருந்​துகள் முறை​யாக இயக்​கப்​பட​வில்லை என்ற குற்​றச்​சாட்​டில் உண்மை இல்​லை.

தவிர, சென்​னை​யில் இருந்து மதி​யம், மாலை நேரத்​தில் விழுப்​புரம், திண்​டிவனம், திரு​வண்​ணா​மலைக்கு இயக்​கப்​படும் பேருந்​துகள் இரவில் சென்னை திரும்​பி​விடும். இந்த பேருந்​துகள் இரவு மீண்​டும் இயக்​கப்​படும். ஆனால், திட்​ட​மிட்ட நேரத்​துக்கு அந்த பேருந்​துகள் செல்​லாத​தால், சென்னை திரும்ப தாமதம் ஏற்​பட்​டது. சென்​னை​யில் இருந்து ஏராள​மானோர் தங்​கள் சொந்த வாக​னங்​களில் புறப்​பட்​டுச் சென்​ற​தால் ஏற்​பட்ட போக்​கு​வரத்து நெரிசலே இந்த தாமதத்​துக்கு காரணம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தேர்தலுக்கு முந்தைய நாள் இரவில் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் புறப்பட தாமதம் ஏன்? - போக்குவரத்து துறை விளக்கம்
மின் தளவாடங்களில் பழுதை 30 நிமிடத்தில் சரி செய்ய வேண்டும்: பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in