ஸ்​டா​லினுடன் ஒன்​றாக பிரச்சாரம் செய்ய ராகுல் தயங்கு​வது ஏன்? - தவிப்​பில் திமுக கூட்டணி தலைவர்கள்

ஸ்​டா​லினுடன் ஒன்​றாக பிரச்சாரம் செய்ய ராகுல் தயங்கு​வது ஏன்? - தவிப்​பில் திமுக கூட்டணி தலைவர்கள்
Updated on
2 min read

திமுக - காங்​கிரஸ் இடையே கடந்த மூன்று மாதங்​களாக நீடித்து வந்த தொகு​திப் பங்​கீடு மல்​லுக்​கட்டு ஒரு​வழி​யாக அண்​மை​யில் முடிவுக்கு வந்த நிலை​யில், ராகுல் காந்​தியை தமிழக தேர்​தல் பிரச்​சா​ரத்​திற்கு அழைத்து வரு​வது தொடர்​பாக அடுத்​தகட்ட சர்ச்சை ஓட ஆரம்​பித்​திருக்​கிறது.

நீண்ட இழுபறிக்​குப் பிறகு காங்​கிரஸுக்கு 28 தொகு​தி​களை​யும், ஒரு ராஜ்ய சபா சீட்​டை​யும் திமுக ஒதுக்​கியது. ஆனால், குறைந்​த​பட்​சம் 35 தொகு​தி​களை எதிர்​பார்த்த ராகுல் காந்​திக்கு இந்த உடன்​படிக்​கை​யில் அறவே உடன்​பாடு இல்​லை. என்​றாலும் ப.சிதம்​பரத்தை உள்ளே கொண்டு வந்து திமுக சங்​கடப்​ப​டாத வகை​யில் பேச்​சு​வார்த்​தையை முடித்​தார் செல்​வப்​பெருந்​தகை. தன்​னால் சிபாரிசு செய்​யப்​பட்ட வேட்​பாளர்​கள் சிலருக்கு தொகுதி கிடைக்​காமல் போன​தி​லும் ராகுலுக்கு செல்​வப்​பெருந்​தகை மீது வருத்​தம் என்​கி​றார்​கள். இதையடுத்​து, அவரை டெல்​லிக்கே வரவழைத்​துப் பேசிய ராகுல் காந்​தி, தனது ஆதங்​கத்தை வெளிப்​படுத்​தி​ய​தாக​வும் அவரிடம் ராஜி​னாமா கடிதத்தை எழுதி வாங்​கி​விட்​டார் எனவும் செய்​தி​கள் கசிய ஆரம்​பித்​தன. இதனால் தான், “தேர்​தல் முடிந்​ததும் மாநிலத் தலை​வர் பதவி​யில் இருந்து வில​கி​விடு​வேன்” என செல்​வப்​பெருந்​தகை தாமாக முன்​வந்து அறி​வித்​த​தாக​வும் சொல்​கி​றார்​கள். இவ்​வளவு சிக்​கல்​கள் இருப்​ப​தால் தான் தமிழக தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு வரு​வது குறித்து ராகுல் காந்தி இன்​ன​மும் ஆர்​வம் காட்​டா​மல் இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய காங்​கிரஸ் நிர்​வாகி​கள் சிலர், “புதுச்​சேரி​யில் ஏப்​ரல் 6-ம் தேதி ராகுல் காந்தி பிரச்​சா​ரம் செய்​தார். அன்​றைய தினமே முதல்​வர் ஸ்டா​லினும் அங்கு பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அதனால் ராகுலும் ஸ்டா​லினும் ஒரே மேடை​யில் பிரச்​சா​ரம் செய்​வதற்​கான ஏற்​பாடு​களைச் செய்​வ​தாக திமுக தரப்​பில் இருந்து கேட்​டார்​கள். ஆனால், "கேரளா பிரச்​சா​ரத்​திற்​குச் செல்ல வேண்டி இருப்​ப​தால் நேரமில்​லை" என ராகுல் தெரி​வித்​து​விட்​டார்.

இந்த நிலை​யில், ராகுல் புதுச்​சேரி பிரச்​சா​ரத்​துக்கு வந்த நாளில், ‘தவெக-வை குறைத்து மதிப்​பிட முடி​யாது. திமுக கூட்​ட​ணி​யில் நாங்​கள் கூடு​தல் இடங்​களைப் பெற முயற்​சித்​தோம். ஒரு பக்​கம், ஒரு சின்ன தோசையைக் கொடுத்​துப் பங்கு போட்​டுக்​கொள்​ளச் சொன்​னார்​கள். மற்​றொரு​புறம், கல்​யாண விருந்தே வைத்து அழைத்​தார்​கள். நாங்​கள் அனு​மார் மாதிரி; எங்​கள் பலம் எங்​களுக்கே தெரி​யாது’ என ராகுலுக்கு நெருக்​க​மான பிர​வீன் சக்​கர​வர்த்தி கொளுத்​திப் போட்​டார்.

அத்​துடன், ‘காங்​கிரஸ் தலைமை கேட்​டுக் கொண்​ட​தால் தான் விஜய்யை சந்​தித்​துப் பேசினேன்’ என்​றும் அவர் பேட்​டியளித்​தார். இதெல்​லாம் திமுக - காங்​கிரஸ் கூட்​ட​ணிக்​குள் பெரும் சலசலப்பை உரு​வாக்​கியது. அதேசம​யம், புதுச்​சேரி பிரச்​சா​ரத்​தில் திமுக வேட்​பாளர்​களை ராகுல் மேடை ஏற்​றாத நிலை​யிலும் ஸ்டா​லின் தனது பிரச்​சார மேடை​யில் காங்​கிரஸ் வேட்​பாளர்​களை​யும் உட்​கார​வைத்​தார்.

இதையடுத்து ஏப்​ரல் 9-ம் தேதி ஸ்டா​லினுடன் ராகுல் கூட்​டாக பங்​கேற்​கும் பொதுக்​கூட்​டத்​திற்கு ராகுலிடம் அனு​மதி கேட்​கப்​பட்​டது. அதற்​கும் பதில் வரவில்​லை. விஜய்​யின் வரு​கை​யால் சிறு​பான்​மை​யினர் வாக்​கு​கள் சிதறி​விடுமோ எனப் பதறும் திமுக, அந்த வாக்​கு​களை தக்​கவைக்க ராகுல் காந்​தி​யின் பிரச்​சா​ரம் அவசி​யம் என நம்​பு​கிறது. அதனால் சென்​னை, கோவை, திருச்​சி, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களில் ஏதாவது ஒரு இடத்​தில் ராகுல் - ஸ்டா​லின் கூட்​டுப் பிரச்​சா​ரம் செய்​ய​வேண்​டும் என திமுக விரும்​பு​கிறது.

அது​மட்​டுமல்​லாது, தொகு​திப் பங்​கீடு பிரச்​சினை​யில் இரண்டு கட்​சிகளுக்​கும் இடையே சிறு சிறு மனஸ்​தாபங்​கள் இருக்​கின்​றன. அதையெல்​லாம் சரி செய்து இரண்டு கட்​சி​களின் தொண்​டர்​களும் ஜெல்​லாக வேண்​டு​மா​னால் அதற்கு ராகுலும் ஸ்டா​லினும் இணைந்து பிரச்​சா​ரம் செய்​வதும் முக்​கி​யம். அதி​முக கூட்​ட​ணியை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்​கெனவே பிரச்​சா​ரம் செய்​து​விட்ட நிலை​யில், மீண்​டும் தமி​ழ​கம் வரவிருக்​கி​றார். அமித் ஷா மற்​றும் 6 மாநில முதல்​வர்​களும் பிரச்​சா​ரத்​திற்கு

வரும் நிலை​யில் ராகுலும் பிரச்​சா​ரம் செய்ய வேண்​டும் என திமுக கூட்​ட​ணித் தலை​வர்​கள் விரும்​பு​கி​றார்​கள். இது தொடர்​பாக ராகுலிடம் திமுக, காங்​கிரஸ் தலை​வர்​கள் தொடர்ந்து பேசி வரு​கி​றார்கள்” என்​ற​னர்.

திமுக உடனான தொகுதி உடன்​பாட்​டில் தனக்கு திருப்தி இல்​லாத காரணத்​தால், “முடிந்​தால் திமுக தயவில் நீங்​களே ஜெயித்து வாருங்​கள்” என ராகுல் காந்தி தமிழக காங்​கிரஸாரை கைகழுவி விட்​டார் என்று வரும் செய்​தி​கள் உண்​மையா இல்​லையா என்​பதை ராகுல் - ஸ்டாலின் கூட்​டுப் பிரச்​சாரம் மட்​டுமே உறுதி செய்​யும்.

ஸ்​டா​லினுடன் ஒன்​றாக பிரச்சாரம் செய்ய ராகுல் தயங்கு​வது ஏன்? - தவிப்​பில் திமுக கூட்டணி தலைவர்கள்
அன்புமணி பிரச்சாரம்: பயணத் திட்டம் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in