நாடுமுழுவதும் புகையிலைக்கு ஏன் தடை விதிக்க கூடாது? - மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on
1 min read

மதுரை: பெரும்​பாலான மாநிலங்​களில் தடை விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், நாடு முழு​வதும் புகை​யிலைப் பயன்​பாட்​டுக்கு ஏன் தடை விதிக்​கக் கூடாது என்​பது குறித்து மத்​திய அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஆர்​. மணி​பார​தி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​: நாட்​டில் 13 முதல் 15 வயதுடைய பள்ளி மாணவர்​களில் 8.5 சதவீதம் பேர் பல்​வேறு வடிவங்​களில் புகை​யிலை​யைப் பயன்​படுத்​து​வது ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. கல்வி நிறு​வனங்​களைச் சுற்​றி​யுள்ள கடைகளில் புகை​யிலை வகைகள் பெரு​மள​வில் விற்​கப்​படு​வதும் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

குட்​கா, பான் பராக், பான் மசாலா போன்ற மெல்​லும் புகை​யிலை வகை​களில் 4,000-க்​கும் மேற்​பட்ட வேதிப்​பொருட்​கள் உள்​ளன. இவற்​றில் குறைந்​தது 40 வேதிப்​பொருட்​கள் புற்​று​நோயை உண்​டாக்​கக் கூடிய​வை. மெல்​லும் புகை​யிலை பயன்​பாடு, பல்​வேறு வகை​யான புற்​று​நோய்​கள் மற்​றும் இதய நோய்​கள் உள்​ளிட்ட பல நாள்​பட்ட நோய்​களுக்​கான முக்​கியக்காரணி​களில் ஒன்​றாக உள்​ளது.

மெல்​லும் மற்​றும் நுகரப்​படும் புகை​யிலை​யில் ‘நிக்​கோட்​டின்’ வேதிப்​பொருள் உள்​ளது. இது வாய் அல்​லது மூக்​கின் திசுக்​கள் வழி​யாக உறிஞ்​சப்​படு​கிறது. இது பக்​க​வாதம், வாய் புற்​று​நோய் மற்​றும் நுரை​யீரல் புற்​று​நோய் ஏற்​படும் அபா​யத்தை அதி​கரிக்​கிறது. தமிழகத்​தில் 2023 நவம்​பர் முதல் 2024 செப்​டம்​பர் வரை போலீ​ஸார் நடத்​திய சோதனை​யில் 12,336 கிலோ கூல்​லிப் உள்பட 1 லட்​சத்து 27,561 கிலோ தடை செய்​யப்​பட்ட புகை​யிலைப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

தமிழகத்​தில் தடை செய்​யப்​பட்ட புகை​யிலைப் பொருட்​களின் விற்​பனையைத் தடுக்க உயர் நீதி​மன்​ற உத்​தரவு அமல்​படுத்​தப்​பட​வில்​லை. எனவே, தமிழகத்​தில் பள்​ளி​களில் புகை​யிலை இல்​லாத கல்வி நிறுவன வழி​காட்​டு​தல்​களைச் செயல்​படுத்​த குழந்​தைகளுக்​கான புகை​யிலை தடுப்பு மையம் அமைத்து உளவிய​லா​ளரை நியமிக்க வேண்​டும்.

மேலும், பள்ளி மாணவர்​களுக்கு ஒவ்​வொரு கல்வி ஆண்​டிலும் குறைந்​தது இரு முறை​யா​வது வாய்​வழி- பல் சுகா​தா​ரப் பரிசோதனை​களை மேற்​கொள்ள உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள், தடை செய்​யப்​பட்ட புகை​யிலைப் பெருட்​கள் விற்​பனை தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை அமல்​படுத்த எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசும், பெரும்​பாலான மாநிலங்​

களில் புகை​யிலைப் பொருட்​கள் பயன்​பாட்​டுக்​குத் தடை இருக்​கும்போது நாடு முழு​வதும் ஏன்தடை வி​திக்​கக் கூடாது என்​பது தொடர்​பாக மத்​தி​ய அரசும்​ பதில்​ மனுத்​ தாக்​கல்​ செய்​ய வேண்​டும்​ என உத்​தரவிட்​டனர்​.

Santhanakoodu Festival
ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் 21% உயர்வு: உலகின் முதல் ‘டிரில்லியன் அதிபர்’ ஆனார் எலான் மஸ்க்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in