“மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு ஏன் இன்னும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை?” - அன்புமணி

 அன்புமணி

அன்புமணி

Updated on: 
1 min read

சென்னை: “மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு இன்னும் ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மேகேதாட்டு விவகாரம் தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை. மேகேதாட்டு தொடர்பாக தமிழக அரசு இன்னும் ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை எனப் புரியவில்லை. இது குறித்து நூறு முறை சொல்லிவிட்டேன்.

பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு, கர்நாடகாவின் முதல்வர் ஆணவத்தோடு பேசுகிறார். தமிழகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் காவிரியை நம்பி உள்ளன. பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு, கர்நாடக முதல்வர் பொய் பேசுகிறார். காவிரி தமிழகத்தின் உரிமை. கர்நாடகாவின் முதல்வர் திரும்பத் திரும்ப பொய் சொல்கிறார்.

இது குடிநீர் பிரச்சினை என ஏன் சொல்கிறீகள். பெங்களூருவுக்கு தேவையானது 5 டிஎம்சி அதை கேஆர்எஸ் அணையில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஏன் 15 ஆயிரம் ஏக்கரை அழித்து அணை கட்டுகிறீகள். உச்ச நீதிமன்றம் தண்ணீரை பிரித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளது. மேகேதாட்டு அணை என்ற பேச்சுக்கே இடமில்லை; ஒரு செங்கல்லைக் கூட கட்ட முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> அன்புமணி</p></div>
சோனியாவின் நூல் விழாவில் கேப்டன் அம்ரீந்தர் சிங்: மீண்டும் காங்கிரஸுக்கு இழுக்க முயற்சியா?

X