​திருச்செந்தூர் கோயில் கட்டண தரிசன முறைகேட்டை அதிகாரிகள் கண்காணிக்​க தவறியது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

படம்: மு.லெட்சுமி அருண்

படம்: மு.லெட்சுமி அருண்

Updated on
1 min read

மதுரை: திருச்​செந்​தூர் கோயில் தரிசனக் கட்டண முறை​கேடு தொடர்​பாக அதி​காரி​கள் முறை​யாக கண்​காணிக்​காமல் இருந்​தது எப்​படி என உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பியது.

திருச்​செந்​தூர் முரு​கன் கோயி​லில் 100 ரூபாய் தரிசனக் கட்டண ரசீது வழங்​கிய​தில் ரூ.25 லட்​சத்து 24,100 முறை​கேடு நடந்​தது தொடர்​பாக தற்​காலிக ஊழியர் மேனகா பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். இந்த முறை​கேடு தொடர்​பாக கணினி​யில் அச்​சிடப்​பட்ட சீட்​டு​களை ஒப்​பிட்டு பார்க்​காமல் அலட்​சி​ய​மாக இருந்​த​தாக கோயில் பணி​யாளர்​கள் பால​முரு​கன், உச்​சி​மா​காளி ஆகியோ​ருக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டது.

இந்​நிலை​யில் பால​முரு​கன், உச்​சி​மா​காளி ஆகியோர் முன்​ஜாமீன் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக்​கல் செய்​தனர். மனுவை நீதிபதி பி.தன​பால் விசா​ரித்து திருச்​செந்​தூர் கோயி​லில் ரூ.25 லட்​சம் வரை முறை​கேடு நடந்​துள்​ளது. இதை முறை​யாகக் கண்​காணிக்​காமல் உயர் அதி​காரி என்ன செய்து கொண்​டிருந்​தார், தரிசனக் கட்​ட​ணம் எவ்​வளவு வசூல் ஆகிறது என்​பது கோயில் அதி​காரி​களுக்​குத் தெரி​யா​தா, கோயிலுக்கு தின​மும் எவ்​வளவு வரு​மானம் வரு​கிறது என கோயில் அதி​காரி​களுக்​குத் தெரிய​வில்லை என்​பதை ஏற்க முடி​யாது.

மனு​தார்​களை மட்​டும் எப்​படிபொறுப்​பாக்க முடி​யும். மனு​தா​ரர்​களின் பணி தொடர்​பாக அறநிலை​யத் துறை அதி​காரி​கள் பதிலளிக்​க வேண்​டும்​. வி​சா​ரணை ஜூன்​ 8-க்​கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது என உத்​தரவிட்​டார்​.

<div class="paragraphs"><p>படம்: மு.லெட்சுமி அருண்</p></div>
புதிய அரசியல் இயக்கம்: அண்ணாமலை அறிவிப்பு; 10 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in