சென்னை - துறைமுகம் தொகுதியில் துடிப்புடன் களமாடும் கட்சிகள்

சென்னை - துறைமுகம் தொகுதியில் துடிப்புடன் களமாடும் கட்சிகள்
Updated on
2 min read

சென்​னை​யின் முக்​கிய பகு​தி​களான பாரி​முனை, பூக்​கடை, உயர் நீதி​மன்​றம் உள்​ளிட்​டவை அடங்​கிய துறைமுகம் தொகு​தி​யில் திமுக, அதி​முக, நாம் தமிழர் கட்​சி, தமிழக வெற்​றிக் கழகம் உள்​ளிட்ட கட்​சிகள் மற்​றும் சுயேட்​சைகள் உள்பட மொத்​தம் 23 பேர் களத்​தில் உள்ளனர்.

திமுக - அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு

கடந்த முறை இத்​தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்று அமைச்​ச​ராக உள்ள பி.கே.சேகர்​பாபு, இந்த முறை​யும் திமுக சார்​பில் போட்​டி​யிடு​கிறார். தேர்​தல் அறிக்​கையை விளக்கி பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். மேலும், துறை​முகம் தொகு​தி​யில் சாலை​யோரம் வசித்த 1,400 பேருக்கு வீடு வழங்​கப்​பட்​டுள்​ளது. இது​போன்ற திட்​டங்​கள் தொடர தன்னை வெற்​றி​பெறச் செய்​யும்​படி பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

அதி​முக - ராயபுரம் மனோ

அதி​முக சார்​பில் மனோகர் என்ற ராயபுரம் மனோ போட்​டி​யிடு​கிறார். மக்​களிடம் நன்கு அறி​முக​மானவர். திமுக அரசு இத்​தொகு​தி​யில் எந்த திட்​டத்​தை​யும் செயல்​படுத்​த​வில்​லை. ‘நான் வெற்றி பெற்​றால், இந்த தொகு​தியை முன்​னோடி தொகு​தி​யாக மாற்​று​வேன்.

சாலை​யோரம் வசிக்​கும் மக்​களுக்கு அவர்​கள் வசிக்​கும் பகு​தி​களி​லேயே வீடு​கள் கட்​டித் தர ஏற்​பாடு செய்​வேன்’ என்பன உள்​ளிட்ட வாக்​குறு​தி​களை அளித்து பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

நாம் தமிழர் கட்சி - பாசன் செரிப்

நாதக வேட்​பாள​ரான பாசன் செரிப், ‘கல்​வி, மருத்​து​வம், குடிநீர் ஆகிய​வற்றை இலவச​மாக கொடுத்​தாலே மக்​களின் பாதி பிரச்​சினை​கள் தீர்ந்​து​விடும். இதை முன்​னிலைப்​படுத்​தியே பிரச்​சா​ரம் செய்து வரு​கிறோம்.

கடந்த ஆட்​சி​யாளர்​களை நம்பி ஏமாந்த மக்​கள் கண்​டிப்​பாக நாம் தமிழர் கட்​சிக்கு வாக்​களிப்​பார்​கள்’ எனக் கூறி பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

தமிழக வெற்​றிக் கழகம் - சினோரா அசோக்

தவெக சார்​பில் போட்​டி​யிடும் சினோரா அசோக், பெண்​களுக்கு ரூ.2,500 உதவித்​தொகை, ஆண்​டுக்கு 6 சிலிண்​டர்​கள் என்பன உள்​ளிட்ட தவெக​வின் தேர்​தல் அறிக்​கைகளை விளக்கி பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

‘மக்​கள் எங்​களை நம்​பு​கிறார்​கள். அவர்​களின் எதிர்​பார்ப்​பு​கள் அனைத்​தும் நிறைவேற்​றப்​படும்’ எனக்​கூறி பிரச்​சா​ரம் மேற்​கொண்​டுள்​ளார்.

தேர்​தல் நாள் நெருங்க நெருங்க வேட்​பாளர்​களின் பிரச்​சா​ர​மும் வேகமெடுத்​துள்​ளது. துறை​முகம் யாருக்கு என்​ப​தில் கடும் போட்டி நிலவுகிறது.

சென்னை - துறைமுகம் தொகுதியில் துடிப்புடன் களமாடும் கட்சிகள்
சாத்தூர் தொகுதியில் சாதிக்கப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in