

அமைச்சர் நிர்மல் குமார் | கோப்புப் படம்
மதுரை: “பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்துப் பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. அதுபற்றி யாரும் இப்போது பேசவேண்டாம்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் யாரும் தலையிட முடியாது. சோதனைக்கான காரணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையே வெளியிடும்.
இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் தவெக ஆட்சிதான் நீடிக்கும், மாற்றம் இருக்காது. அதிமுக, திமுக, பாஜக கட்சிகள் ஒரே கூட்டணியில் இணைந்து வருகின்ற தேர்தல்களை சந்திப்பார்கள். பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. அதுபற்றி யாரும் இப்போது பேச வேண்டாம்.
தவெக அரசில் பொது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு உள்ளது, ஊழல்வாதிகளுக்குத் தான் பாதுகாப்பு இருக்காது. கோயில் அறநிலையத்துறை விவகாரங்களில் நாங்கள் யாரும் தலையிடுவது இல்லை. கடந்த ஆட்சியில் கோயில்களில் திமுகவினரையே அறங்காவலர்களாக நியமித்தார்கள். முன்னாள் அமைச்சர் பிடிஆர் தனது சொந்தக் குடும்பத்தின் டிரஸ்ட்டையே 3 ஆண்டுகளாக செயல்பட விடாமல் தடுத்து வைத்துள்ளார்.” என்றார்.