தமிழக காங்கிரஸுக்கு அடுத்த தலைவர் யார்? - தேர்தல் முடிவுகள் வெளியானதும் செல்வப்பெருந்தகை மாற்றம்

செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்

செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்

Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யான ஓரிரு தினங்​களில் தமிழக காங்​கிரஸுக்கு புதிய தலை​வர் அறிவிக்​கப்​படு​வார் என்​கிற தகவல் வெளி​யாகி​யிருப்​ப​தால் சத்​தி​யமூர்த்தி பவன் அனல் தகிக்​கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தமிழக காங்​கிரஸ் தலை​வ​ராக கே.எஸ்​.அழகிரி நியமனம் செய்​யப்​பட்​டார். காங்​கிரஸ் கட்​சி​யின் விதி​முறை​களின்​படி அவரது பதவிக்​காலம் 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி​யிலேயே நிறைவடைந்​து​விட்​டது. அழகிரி மீது ஏராள​மான புகார்​கள் தலை​மைக்கு சென்​ற​போதும், அகில இந்​திய தலை​மை​யில் நில​விய குழப்​பத்​தால் தமிழக காங்​கிரஸுக்கு புதிய தலை​வர் நியமிப்​ப​தில் தாமதம் ஏற்​பட்​டது. இதற்​கிடை​யில் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் கார்கே சிபாரிசில் கடந்த 2024-ல் தலை​வர் பதவியை தனதாக்​கிக் ​கொண்​டார், செல்​வப்​பெருந்​தகை.

தொண்​டர்​களின் விருப்​பத்​துக்கு மாறாக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக மிகக்​குறுகிய காலத்​திலேயே சத்​தி​யமூர்த்தி பவனில் இருந்து டெல்​லிக்கு புகார்​கள் பறக்க தொடங்​கின. ஆனாலும் கார்​கே​வின் ஆதரவு இருந்​த​தால் அவரது பதவிக்கு எந்த சிக்​கலும் இல்​லை. இந்​நிலை​யில், தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யானதும் செல்​வப்​பெருந்​தகையை மாற்ற அகில இந்​திய தலைமை முடிவு செய்​திருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யிருக்​கிறது.

இதுகுறித்து சத்​தி​ய மூர்த்தி பவன் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: நடந்து முடிந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் குறைந்​த​பட்​சம் 35 தொகு​தி​களிலா​வது காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என ராகுல் காந்தி விரும்​பி​னார்.

ராகுல் காந்தி வருத்தம்: ஆனால் ப.சிதம்​பரத்தை கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்​குள் கொண்​டு​வந்​து, வெறும் 28 இடங்​களுக்கு அகில இந்​திய தலை​மையை ஒப்​புக்​கொள்ள வைத்​தார் செல்​வப்​பெருந்​தகை. இதில் ராகுல் காந்​திக்​குத் தனிப்​பட்ட முறை​யில் பெரிய வருத்​தம் உண்​டு. தொடர்ந்து வேட்​பாளர் தேர்​விலும் தனது ஆதர​வாளர்​களுக்கே செல்​வப்​பெருந்​தகை முக்​கி​யத்​து​வம் கொடுத்​தது பெரும் சர்ச்​சை​யானது. இதன் உச்​ச​மாக, வேட்​பாளர்​கள் தேர்​வில் ‘பணம் விளை​யாடிய​தாக’ முன்​னாள் தமிழக மகளிர் காங்​கிரஸ் தலை​வர் ஹசீனா சையத் கொடுத்த அதிரடி பேட்டி டெல்லி மேலிடத்தை முகம் சுளிக்க வைத்​தது.

மேலும், பிரச்​சா​ரக் கூட்​டம் ஒன்​றில் ராகுல் காந்​தி​யின் பேச்​சைத் தவறாக மொழிபெயர்த்​தது என செல்​வப்​பெருந்​தகை தொடர்ந்து சர்ச்​சைகளில் சிக்​கி​னார். இதையெல்​லாம் கவனத்​தில் கொண்​டு​தான் புதிய தலை​வரை நியமிக்க டெல்லி முடிவுக்கு வந்​திருக்​கிறது. இதைப் புரிந்​து​கொண்​டே, சமீபத்​தில் ‘தலை​வர் பதவி​யில் இருந்து வில​கத் தயார்’ என செல்​வப்​பெருந்​தகை பேட்​டியளித்​திருந்​தார்.

தற்​போது தலை​வர் பதவியைப் பிடிக்க கார்த்தி சிதம்​பரம், ஜோதி​மணி, மாணிக்​கம் தாகூர், செல்​ல​கு​மார், ராஜேஷ்கு​மார் ஆகியோர் தீவிர​மாக முயன்று வரு​கிறார்​கள். முன்​னாள் தலை​வர்​கள் திரு​நாவுக்​கரசர், கே.எஸ் அழகிரி, தங்​க​பாலு போன்​றவர்​களும் வாய்ப்பை எதிர்​பார்த்து காய் நகர்த்தி வரு​கிறார்​கள்.

காங். தலைமை உறுதி: ஆனால். ஏற்​கெனவே மாநிலத் தலை​வர் பதவி​யில் இல்​லாத புதி​ய​வர்​களை நியமிக்​கவே டெல்லி தலைமை விரும்​பு​கிறது. போட்டியில் யாருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ தெரியாது. ஆனால், செல்வப்பெருந்தகையை மாற்றிவிட்டு புதிய தலை​வரை நியமிக்க வேண்டும் என்பதில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மிக​வும் உறு​தி​யாக இருக்​கிறது. இவ்​வாறு அந்த வட்டாரங்கள் தெரி​வித்​தன​.

<div class="paragraphs"><p>செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்</p></div>
“மே. வங்கத்தில் முதல்கட்ட தேர்தலிலேயே 110 இடங்களை பாஜக வென்றுவிட்டது” - அமித் ஷா உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in