“மே. வங்கத்தில் முதல்கட்ட தேர்தலிலேயே 110 இடங்களை பாஜக வென்றுவிட்டது” - அமித் ஷா உறுதி

“மே. வங்கத்தில் முதல்கட்ட தேர்தலிலேயே 110 இடங்களை பாஜக வென்றுவிட்டது” - அமித் ஷா உறுதி
Updated on
1 min read

நாடியா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்டத்திலேயே மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை வாக்காளர்கள் துடைத்தெறிந்துவிட்டனர் என்றும், பாஜக ஏற்கனவே 110 இடங்களைக் கைப்பற்றிவிட்டது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாடியா மாவட்டத்தின் தெஹட்டாவில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் நிலவும் ரவுடி ராஜ்ஜியம் மற்றும் சிண்டிகேட் ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தேர்தல் ஆணையம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது, எனவே மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும். உங்கள் வாக்குகளைத் தடுக்க யாராலும் முடியாது" என்று குறிப்பிட்டார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நாடியா மாவட்டம் வழியாக நடைபெறும் கால்நடை கடத்தலைத் தடுக்கத் தனிப்படை அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை போன்ற வாக்குறுதிகளையும் அவர் அளித்தார்.

பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும், பலதார மணம் ஒழிக்கப்பட்டு, முத்தலாக் தடை சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அடுத்தகட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

“மே. வங்கத்தில் முதல்கட்ட தேர்தலிலேயே 110 இடங்களை பாஜக வென்றுவிட்டது” - அமித் ஷா உறுதி
தோனிக்கு மீண்டும் காயம்: சிஎஸ்கே பயிற்சியாளர் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in