மின்துறை குறித்து 2 நாளில் வெள்ளை அறிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

அமைச்சர் நிர்மல் குமார் | கோப்புப் படம்

அமைச்சர் நிர்மல் குமார் | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: மின்​துறை நில​வரம் குறித்து 2 நாட்​களில் வெள்ளை அறிக்கை வெளி​யிடப்​படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

சட்​டப்​பேரவையில் நேற்று நடந்த விவாதத்​தின்​ போது, எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டாலின், ‘‘தமிழகத்திலேயே மின்​வெட்​டில் நம்​பர் 1 தொகுதி முதல்​வரின் பெரம்​பூர் தொகு​தி​தான். பனையூரில் உள்ள ஆளுங்​கட்சி அலு​வல​கத்​தி​லும் மின்​வெட்​டு. விசிக தலை​வர் திரு​மாவளவன், முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் சந்​திப்​பின்​போதும் மின்​வெட்​டு. மின்​வெட்டு தொட​ராமல் இருக்க, என்ன செய்​யப் போகிறீர்​கள்​?’’’ என குற்​றம்​சாட்​டி​னார்.

இதற்கு பதிலளித்து மின்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மார் பேசும்​போது, ‘‘மின்​துறை​யில் ரூ.2.5 லட்​சம் கோடி கடன் உள்​ளது. கடந்த 15 ஆண்​டுகளாக உள்கட்​டமைப்பு மேம்​பாடு செய்​யப்​பட​வில்லை. மின்​துறை நில​வரம் குறித்து 2 நாட்​களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்​பட்​டும். மின் வெட்​டுகளை சரி செய்ய 125 குழுக்​கள் அமைக்​கப்​பட்டுள்​ளன’’ என்​றார்.

அப்​போது முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி (தி​முக) பேசும்​போது, ‘‘கடந்த 5 ஆண்​டு​களில் சீரான மின் விநி​யோகத்துக்​காக 393 துணை மின் நிலை​யங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு ஆண்​டும், கூடு​தல் மின் தேவைக்​கேற்ப மின்​னுற்​பத்தி திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டன. 90 ஆயிரம் மின் மாற்​றிகள் நிறு​வப்​பட்​டுள்​ளன. இப்​போது உள்ள பணி​யாளர்​களை வைத்​து​தான் கடந்த 5 ஆண்​டு​களில் சீரான மின் விநி​யோகம் வழங்​கப்​பட்​டது’’ என்​றார்​.

<div class="paragraphs"><p>அமைச்சர் நிர்மல் குமார் | கோப்புப் படம்</p></div>
லக்னோவில் உள்ள அனிமேஷன் பயிற்சி மையத்தில் விபரீதம்: தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in