லஜக நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சொத்து மதிப்பு என்ன?

லஜக நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சொத்து மதிப்பு என்ன?
Updated on
2 min read

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் போட்டியிட லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள சொத்து விவரம் பற்றி பார்ப்போம்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கையிருப்பாக 20 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவி சிந்துஸ்ரீ சார்லஸிடம் 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயும் உள்ளது. கார்களில் 66 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார், ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான டொயோட்டோ வெல்பயர் கார் ஆகியவை உள்ளன.

ஜோஸ் சார்லஸிடம் 25 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான 17 ஆயிரத்து 525 கிராம் தங்கமும், 44 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்களும், 3 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான 134 கிலோ வெள்ளியும், 38 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்சுகளும், ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான முத்துக்களும் உள்ளன.

மேலும் டிடிஎஸ் உரிமைக்கோரலில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் வந்துள்ளது. அவரது மனைவியிடம் 5 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3,655 கிராம் தங்கமும், 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்களும், ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான 60 கிலோ வெள்ளியும், ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்சுகளும் உள்ளன.

ஜோஸ் சார்லஸிடம் விவசாயம் அல்லாத நிலம் 192 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. அவரது மனைவியிடம் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலும் உள்ளன. குடியிருப்பு கட்டிடங்கள் 269 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளன. அவரது மனைவியிடம் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ளன.

சொத்தில் 19 கோடியே 45 லட்சம் ரூபாய் கடனும், கார் லோன் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாயும், கிரெடிட் கார்டு லோன் உள்ளூர் வங்கியில் 5 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும், வெளிநாட்டு வங்கியில் 1 கோடியே 3 லட்சம் ரூபாயும் உள்ளன. கடந்த நிதியாண்டில் ஜோஸ் சார்லஸுக்கு 59 கோடியே 37 லட்சம் ரூபாய் வருவாயும், அவரது மனைவிக்கு 16 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வருவாயும் வந்தது.

அசையும் சொத்துகள் ஜோஸ் சார்லஸிடம் 328 கோடி ரூபாயும், மனைவியிடம் 10 கோடியே 61 லட்சம் ரூபாய் அளவிலும் உள்ளன. அதேபோல் அசையா சொத்துகள் ஜோஸ் சார்லஸிடம் சொந்தமாக வாங்கியது 102 கோடி ரூபாய் அளவிலும், பரம்பரையாக வந்தது 167 கோடி ரூபாயாகவும் உள்ளன. அவரது மனைவியிடம் 60 லட்சம் ரூபாய் அளவிலும் உள்ளன.

கடன்கள் மொத்தமாக 210 கோடி ரூபாய் அளவில் உள்ளன. பல்வேறு வங்கிகளில் டெபாசிட் ஆக 200 கோடி ரூபாய் அளவில் உள்ளது. அவரது மனைவி பெயரில் 3 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் டெபாசிட் உள்ளது.

ஜோஸ் சார்லஸ் ஷேர்களில் 14 கோடியே 28 லட்சம் ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளார். அவரது மனைவி 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஷேர்களில் முதலீடு செய்துள்ளார். ஜோஸ் சார்லஸ் அட்வான்ஸ் வாங்கிய வகையில் 195 கோடி ரூபாய் அளவுக்கும், அவரது மனைவிக்கு 24 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கும் தொகையுள்ளது.

ஜோஸ் சார்லஸ் மீதான வழக்குகளைப் பொறுத்த வரையில், சட்ட விரோத நிதிகளை பிணையற்ற கடன்கள் எனக் காட்டும் பேலன்ஸ் ஷீட்டில் கையெழுத்திட்டு குற்றச்செயல் மூலம் ஈட்டப்பட்ட வருவாயை சொத்துகளை வாங்கியதாக அமலாக்க இயக்குநரகத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். என்ஐஏ எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அத்துடன், பணமோசடி சட்டவிரோதப் பணத்தை ஈட்டுதல், அப்பணத்தை அசையா சொத்துகளில் முதலீடு செய்தல் தொடர்பான வழக்கு, டெல்லி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டுள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் லாட்டரி சீட்டுகள் தொடர்பான குற்றவியல் வழக்குகள் 3 நிலுவையில் உள்ளன.

லஜக நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சொத்து மதிப்பு என்ன?
2021-ல் 20, இப்போது 27... அதிமுக கூட்டணியில் பாஜகவின் ‘தொகுதி வியூகம்’ பின்புலம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in