

குரோம்பேட்டை: குரோம்பேட்டை ராதா நகரில் உள்ள மகாதேவ் கைலாஷ் யாத்ரா நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 49 பேர் கடந்த 14-ம் தேதி ஆன்மிகப் பயணமாக நேபாளம் சென்றனர்.
பயணத்தை முடித்து கடந்த 27-ம் தேதி சென்னை திரும்ப இருந்த நிலையில், சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அவர்கள் மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து டிராவல் ஏஜென்சி நிர்வாகி மாறவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சம்பவத்தன்று இமிக்ரேஷன் அலுவலகத்துக்கு வெளியே எங்கள் குழுவினர் காத்திருந்தனர்.
வெள்ளம் ஏற்பட்டதும் அவர்கள் பாதுகாப்புக்காக ஓடிச் சென்றதை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்தோம். நேபாளத்தில் மருத்துவமனைகள், மீட்பு முகாம்கள் உள்ளிட்ட இடங்களில் தேடியும்கிடைக்கவில்லை.
தற்போது காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் நேபாள அரசிடம் இருந்து மட்டுமே கிடைக்கின்றன. சீன அரசிடம் இருந்து எந்தத் தக
வலும் வரவில்லை. எனவே தமிழக அரசு தலையிட்டு சீன அரசிடம் இருந்து 49 பேரின் நிலை குறித்த தகவல்களைப் பெற்றுத் தர வேண்டும் என்றார்.