தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி வரை குறைய வாய்ப்பு

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி வரை குறைய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா முதல் தென் கர்நாடகத்தின் உள்பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (மார்ச் 19) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 20-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21, 22-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23, 24-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை நாளை முதல் மார்ச் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறைவாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 92 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் 9 செ.மீ, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 8 செ.மீ, திருப்பூர் மாவட்டம் வட்டமலை நீர்த்தேக்கம், நாகப்பட்டினம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 5 செ.மீ, காரைக்காலில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி வரை குறைய வாய்ப்பு
தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்​லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in