தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்​லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
இடம்: கோத்தகிரி சாலை

இடம்: கோத்தகிரி சாலை

படம்: எம்.சத்தியமூர்த்தி

Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரிவித்துள்​ளார்.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. அன்​றில் இருந்தே தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்துவிட்​டன.

இதையடுத்​து, தமிழகம் முழு​வதும் பறக்​கும் படை​யினர் மூலம் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. தற்போது 234 தொகு​தி​களி​லும், தொகு​திக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்​காணிப்​புக் குழுக்​கள் என்ற விகிதத்​தில், தமிழகம் முழு​வதும் 2,160 பறக்​கும் படைகள், 2,160 நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் தீவிர கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இந்நிலையில், தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய (18 மார்ச்) நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ. 42.65 கோடி ஆகும். தமிழகம் முழு​வதும் ரூ. 2.37 கோடி ரொக்கமும், ரூ.0.18 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ. 2.88 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.16.42 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூ.20.80 கோடி மதிப்பிலான இலவசங்கள் / பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>இடம்: கோத்தகிரி சாலை </p></div>
புதுச்சேரியில் தொகுதிப் பங்கீட்டுக்கு முன்பே வேட்புமனு தாக்கலை தொடங்கிய திமுக!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in