வானிலை முன்னறிவிப்பு: கோவை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

நவ.30-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வானிலை முன்னறிவிப்பு: கோவை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை (நவ.28) நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவ.29-ல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் 30-ம் தேதி வாக்கில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது டிச.2-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளில் இருந்து மத்தியக் கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (நவ.28) நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

நாளை (நவ.28) திருப்பூர், ஈரோடு, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 29-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.28) வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: கோவை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
அமைச்சர் வன்னியரசு புலியை துரத்திய நிகழ்வு குறித்து விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி

X