கூட்டாட்சியியலை நிலைநிறுத்தி மாநில உரிமைகளை காப்போம்: அரசியலமைப்பு சட்ட தினத்தில் முதல்வர் உறுதி

கூட்டாட்சியியலை நிலைநிறுத்தி மாநில உரிமைகளை காப்போம்: அரசியலமைப்பு சட்ட தினத்தில் முதல்வர் உறுதி
Updated on
1 min read

சென்னை: ‘‘கூட்​டாட்​சி​யியலை நிலைநிறுத்​த​வும் அனைத்து மாநிலங்​களின் உரிமை​களை​யும் பாது​காக்​க​வும் தேவை​யான அனைத்​தை​யும் மேற்​கொள்​வோம்’’ என்று அரசி​யலமைப்புச் சட்ட தினத்​தையொட்டி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

அரசி​யலமைப்புச் சட்​டத்​தின் 76-வது ஆண்டு தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதை யொட்டி அரசு அலு​வல​கங்​கள், பள்​ளி, கல்​லூரி​களில் அரசி​யமைப்​புச் சட்ட முகப்​புரையை படிக்க வேண்டும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று முன்​தினம் உத்​தர​விட்​டிருந்​தார். அத்​துடன் பள்​ளி, கல்​லூரி​களில் இதுதொடர்​பாக பேச்சு, கட்​டுரைப் போட்​டிகளை நடத்​த​வும் அறி​வுறுத்​தி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதிவில் கூறியிருந்ததாவது: இந்​தியா என்​பது ஒரு பண்​பாட்​டுக்கோ ஒரு கருத்​தி​யலுக்கோ மட்​டு​மானதல்ல, அதன் மக்​கள் அனை​வருக்​கு​மானது. அம்​பேத்​கரின் இந்த பரந்த பார்​வையைச் சுருக்க முயற்​சிக்​கும் அனைத்து சக்​தி​களுக்​கும் எதி​ராகப் போராடும் நமது மனஉறு​தியை இந்த அரசி​யலமைப்​புச் சட்ட நாளில் மீண்​டும் உறுதி கூறுகிறோம்.

நமது அரசி​யலமைப்​புச் சட்​டத்​தில் வரையறுக்​கப்​பட்​டுள்ள கூட்​டாட்​சி​யியலை நிலை நிறுத்​த​வும் அனைத்து மாநிலங்​களின் உரிமை​களை​யும் பாது​காக்​க​வும் தேவை​யான அனைத்​தை​யும் மேற்​கொள்​வோம். நமது அரசி​யலமைப்​புச் சட்​டம் உறு​தி​யளிக்​கும் நீதி, சுதந்​திரம், சமத்​து​வம் மற்​றும் சகோ​தரத்​து​வத்​தைக் கண்டு அஞ்​சுபவர்​களிடம் இருந்து நமது குடியரசைக் காப்​பதே இந்திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​துக்கு நாம் செலுத்​தும் உண்​மை​யான மரி​யாதையாக இருக்கும். இவ்​வாறு முதல்வர் தெரி​வித்​துள்​ளார்​.

கூட்டாட்சியியலை நிலைநிறுத்தி மாநில உரிமைகளை காப்போம்: அரசியலமைப்பு சட்ட தினத்தில் முதல்வர் உறுதி
நீதித் துறையில் சீர்திருத்தம் அவசியம்: அரசியலமைப்பு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in