நீதித் துறையில் சீர்திருத்தம் அவசியம்: அரசியலமைப்பு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

நீதித் துறையில் சீர்திருத்தம் அவசியம்: அரசியலமைப்பு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
Updated on
1 min read

சென்னை: நீ​தித் துறை​யில் காலத்​துக்​கேற்ப சீர்​திருத்​தம் செய்ய வேண்​டியது அவசி​யம் என ஆளுநர் ஆர்​.என்​.ரவி வலி​யுறுத்​தியுள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு டாக்டர் அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலைக்கழகத்​தில் இந்​திய அரசி​யலமைப்பு தின கருத்​தரங்​கம் நேற்று நடை​பெற்​றது. இதனை ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடங்கி வைத்து பேசி​யது:

மக்​களுக்​காக உரு​வாக்​கப்​பட்ட இந்​திய அரசி​யலமைப்​பு, காலப்​போக்​கில் சிலரது கைவசம் சென்​று​விட்​டது. அது மீண்​டும் தனது உரிமை​யாளர்​களான மக்களிடம் செல்ல வேண்​டும். அதற்காகவே இந்த ஆண்டு முழு​வதும் விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​படு​கின்​றன. சாமானிய மக்​களின் வாழ்​வில் அரசி​யலமைப்பு எவ்​வாறு பங்கு வகிக்​கிறது என்று பள்​ளி, கல்​லூரி​களுக்குச் சென்று கூறவேண்​டும். அரசி​யலமைப்பு ரகசி​ய​மாகவோ, சிக்​கலான சட்ட ஆவணமாகவோ இருக்​கக்​கூ​டாது.இளைஞர்​களிடம் அதை எளிமையாக எடுத்​துச் செல்ல வேண்​டும்.

அரசி​யலமைப்பு கொடுத்த வாக்​குறு​தி​களை நீதித்​துறை உள்​ளிட்ட அனைத்து துறை​களும் காக்க வேண்​டும். நீதியை அணுகும் உரிமை ஒவ்​வொரு இந்தி​யருக்​கும் கிடைக்க வேண்​டும் என்​கிறது அரசி​யலமைப்​பு. ஆனால், ‘நீ​தி​யைப் பெறு​வதற்​கான செலவு தற்​போது உயர்ந்​து​ விட்​டது. வழக்​கு​களைக் கையாள்​வது பணக்​காரர்​களின் விஷய​மாகி​விட்​டது’ என்ற எண்​ணம் சிலருக்கு உள்​ளது. பலருக்கு நீதி கிடைக்காமல் உள்​ளது என்​ப​தை​யும் ஒப்​புக்​கொள்ள வேண்​டும். நீதி என்பது சந்​தைப் பொருள் அல்ல. அது அனை​வருக்கும் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காத​தால் சிறைச்​சாலைகள் ஏழைகளால் நிரம்​பி​யுள்​ளன. பணக்​கார குற்​ற​வாளி​கள் புத்​தி​சாலி வழக்​கறிஞர் வைத்து தப்​புகின்றனர்.

கொலை போன்ற பெரிய குற்​றங்​களில் தண்​டனை விகிதம் மிக​வும் குறை​வாக உள்​ளது. நீண்​டகால விசா​ரணை​கள் நீதியை தாமதப்​படுத்​துகின்​றன. தாமதமே நீதியை மறுக்​கும் நிலையை உருவாக்​கு​கிறது. நீதி​மன்​றங்​கள் மக்​களுக்கு அச்​சமூட்​டும் இடமாக இருக்​கக் கூடாது. 75 ஆண்​டு​கள் ஆனபிறகும் இன்​னும் மக்​களுக்கு புரி​யும் மொழி​யில் பேச முடிய​வில்​லை. இந்த நிலை மாற வேண்​டும். வழக்​கு​களுக்​கான செல​வு​கள் குறைய வேண்​டும்.

நமது அரசி​யலமைப்பை புரிந்து கொள்ள வெளி​நாட்டு நீதி​மன்ற தீர்ப்​பு​களை நாட அவசி​யம் இல்​லை. நமது நாகரி​கம் 5,000 ஆண்​டு​கள் பழமை​யானது. நமக்கே சரி​யான நீதிக் கொள்

கைகள் உள்​ளன. அரசியல், அறிவியல், ராணுவம் என எல்லாத்துறை​களி​லும் தன்னிறைவு அடைந்த நாம், நீதித்​துறை​யில் ஏன் தன்​னிறைவு அடைய முடியாது, நாம் சிந்​திக்க வேண்​டிய கால​கட்​டத்​தில் இருக்​கிறோம். நாம் உரு​வாக்​கிய அமைப்பு​கள் சில நேரங்​களில் தவறான நடை​முறை​களுக்கு ஊக்​கமளிக்​கின்​றன. எனவே, நீதித் துறையை சீர்​திருத்தி அது சுதந்​திரமாக இருக்க வேண்​டும். இவ்​வாறு பேசி​னார்.

நிகழ்​வில் முன்​னாள் நீதிபதி வி.​பார​தி​தாசன், பல்​கலைக்​கழக பதி​வாளர்​ கவுரி ரமேஷ் உள்​ளிட்​டோர்​ கலந்​துகொண்​டனர்​.

நீதித் துறையில் சீர்திருத்தம் அவசியம்: அரசியலமைப்பு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது: தமிழகத்தில் நவ.29, 30-ல் அதிகனமழை எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in