‘வனத்தை விட்டு வெளியேற மாட்டோம்’ - போராட்டத்தில் மேகமலை மக்கள் ஆவேசம்

‘வனத்தை விட்டு வெளியேற மாட்டோம்’ - போராட்டத்தில் மேகமலை மக்கள் ஆவேசம்
Updated on: 
1 min read

தேனி: தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு காந்திகிராமம், சீலமுத்தையாபுரம், வண்டியூர், வீருசின்னம்மாள்புரம், சிங்கராஜபுரம், பசுமலைத்தேரி , கீழபூசனூத்து, மேலபூசனூத்து, அரசரடி, இந்திரா நகர், பொம்மிராஜபுரம் உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பட்டா இல்லாத குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) கடமலைக்குண்டு பேருந்து நிலையப் பகுதியில் மலைக் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை இந்த போராட்டத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.

போராட்டம் நடைபெறும் இடத்தின் தன்மை, கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து எஸ்பி.பிரவீன்கவுதம் நேற்று ஆய்வு செய்தார்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க போராட்டம் நடைபெறும் நாட்களில் கடமலைகுண்டு, வருசநாடு மயிலாடும்பாறை தங்கம்மாள்புரம் மூலக்கடை குமணன்தொழு ஆகிய கிராமங்களில் உள்ள 6 டாஸ்மாக் கடைகளையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வனகிராம மக்கள் கூறுகையில், “இன்று முதல் பெருந்திரள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேகமலை வழக்கு வரும் 29-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அந்த விசாரணையின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் காத்திருப்பு போராட்டத்தை வலுப்படுத்தி நடத்துவோம்” என்றனர்.

‘வனத்தை விட்டு வெளியேற மாட்டோம்’ - போராட்டத்தில் மேகமலை மக்கள் ஆவேசம்
“சிந்து நதி நீரை தடுப்பது போர் நடவடிக்கையே” - ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in