“கம்யூனிஸ்ட்டுகளை ஒழிக்க விரும்பும் எதிரிகளை எதிர்கொள்வோம்” - பெ.சண்முகம்

“கம்யூனிஸ்ட்டுகளை ஒழிக்க விரும்பும் எதிரிகளை எதிர்கொள்வோம்” - பெ.சண்முகம்
Updated on: 
1 min read

சென்னை: “கம்யூனிஸ்ட்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம். கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இடைத்தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான வெறுப்பு, எதிர்ப்பு, ஒவ்வாமை, நட்பு, நலன் என பல விதங்களிலும் கருத்துக்களும், அறிவுரைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்போம்.

கம்யூனிஸ்ட்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம். கம்யூனிசத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை. அழிக்கவும் முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

“கம்யூனிஸ்ட்டுகளை ஒழிக்க விரும்பும் எதிரிகளை எதிர்கொள்வோம்” - பெ.சண்முகம்
“தவெக உடன் பாமக கூட்டணி, அமைச்சரவையில் இடம் என்பது வதந்தி” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in