“பாஜக ‘புல்டோசரை’ தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துவோம்” - பிருந்தா காரத்

“பாஜக ‘புல்டோசரை’ தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துவோம்” - பிருந்தா காரத்
Updated on
1 min read

திருவாரூர்: அதிமுகவின் பின்னாள் ஒளிந்துகொண்டு பாஜக புல்டோசர் வருவதை தமிழகத்தின் எல்லையிலேயே தடுத்து நிறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்துவுக்கு ஆதரவாக நேற்று இரவு நடைபெற்ற பொதுகூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிருந்தா காரத், “இடதுசாரிக் கட்சிகள் போட்டியிடும் 10 தொகுதிகள் எங்களிடம் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு ஆற்றியுள்ள பணிகளின் அடிப்படையில், நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

எங்கள் கூட்டணி மிகவும் வலிமையானது. சந்தேகத்துக்கிடமின்றி இக்கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதிமுக - பாஜக கூட்டணி முற்றிலும் சந்தர்ப்பவாதக் கூட்டணி. எவ்விதக் கொள்கை அடிப்படையும் இன்றி அமைந்துள்ளது. அதிகார வேட்கையைத் தவிர, இவ்விரு கட்சிகளுக்கும் இடையே பொதுவான அம்சம் வேறு என்ன இருக்க முடியும்? பாஜகவின் அடிப்படைச் சித்தாந்தங்களுக்கு முற்றிலும் முரணான கருத்துக்களைக் கூட, அதிமுகவினர் அதிகாரத்துக்காக பேசி வருகின்றனர்.

நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்பைத் தனது 'புல்டோசaர்' கொண்டு நசுக்கி வருகிறது பாஜக. துரதிருஷ்டவசமாகவும், வன்மையாகக் கண்டிக்கத்தக்க வகையிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக கட்சியானது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், குறிப்பாகத் தமிழ்நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்துக்கும் எதிராகச் செயல்பட்டுக்கொண்டு பாஜக இங்கு காலூன்றுவதற்கு வழிவகை செய்து வருகிறது.

இந்த 'புல்டோசர்' அணுகுமுறை இந்தியாவையே சீரழித்து வருகிறது. எனவே, இடதுசாரிக் கட்சிகளாகிய நாங்கள் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு, இந்த அதிமுகவின் பின்னாள் ஒளிந்துகொண்டுள்ள பாஜக 'புல்டோசர்' தமிழ்நாட்டுக்குள் வருவதை மாநிலத்தின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுவதை உறுதி செய்வோம். மேலும், திமுக தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் சிறப்பான வளர்ச்சியை முன்னெடுப்பதை உறுதி செய்வோம்” என தெரிவித்தார்.

“பாஜக ‘புல்டோசரை’ தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்துவோம்” - பிருந்தா காரத்
என்டிஏ ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும் தயங்காது: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in