

கோப்புப் படம்
சென்னை: “எல்லா பூட்டுகளுக்கும் சாவி அதிகாரம் தான் என அம்பேத்கர் சொல்லியுள்ளார். இப்போது அம்பேத்கரின் கனவு நோக்கி நாங்கள் நகர்கிறோம். தமிழகத்தில் விசிக தான் மையம் என்பதை எங்கள் தலைவர் நிரூபித்துள்ளார்” என விசிக எம்எல்ஏ வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதாக விசிக அறிவித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் வன்னியரசு அமைச்சராவார் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வன்னி அரசு, ‘ என்னை நம்பி இந்த பெரிய பொறுப்பை வழங்கிய திருமாவளவனுக்கு நன்றி. சாதி ஒழிப்பும், தமிழ்த் தேசியமும் விசிகவின் கொள்கை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவர் திருமாவளவன். அவர் சொன்னது இப்போது நிறைவேறுகிறது. ஆட்சியில் பங்கு என்பது, ஜனநாயகத்தை, அதிகாரப் பகிர்வை விரும்புகிற அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தவெக அமைச்சரவையில் இணையுமாறு அழைத்தார்கள், நாங்கள் இணைந்துள்ளோம். எல்லா பூட்டுகளுக்கும் சாவி அதிகாரம் தான் என அம்பேத்கர் சொல்லியுள்ளார். இப்போது அம்பேத்கரின் கனவு நோக்கி நாங்கள் நகர்கிறோம். தமிழகத்தில் விசிக தான் மையம் என்பதை எங்கள் தலைவர் நிரூபித்துள்ளார். அமைச்சர் பதவியில் மக்கள் பாராட்டும்படி, நேர்மையான வகையில் செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.