திருவொற்றியூர், மணலி​ பகுதிகளில் குடிநீர் விநியோகம் டிச.22-ம் தேதி தற்காலிக நிறுத்தம்

திருவொற்றியூர், மணலி​ பகுதிகளில் குடிநீர் விநியோகம் டிச.22-ம் தேதி தற்காலிக நிறுத்தம்
Updated on
1 min read

சென்னை: நீருந்து நிலைய பிர​தான குடிநீர் குழாய் மாற்​றும் பணி காரண​மாக வரும் 22-ம் தேதி காலை 10 மணி முதல் 24-ம் தேதி காலை 10 மணி வரை திரு​வொற்​றியூர், மணலி பகு​தி​யில் குடிநீர் விநி​யோகம் தற்​காலிக​மாக நிறுத்​தப்​படும்.

இது தொடர்​பாக சென்னை குடிநீர் வாரி​யம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: மணலி காம​ராஜர் சாலை​யில் அமைந்​துள்ள திரு​வொற்​றியூர் நீருந்து நிலை​யத்​தில் பிர​தான குடிநீர் குழாயை மாற்றி அமைக்​கும் பணி மேற்​கொள்​ளப்பட உள்​ள​தால் 22-ம் தேதி (திங்​கள்) காலை 10 மணி முதல் 24-ம் தேதி வரை காலை 10 மணி வரை அந்த நீருந்து நிலை​ய​மும், மணலி நீருந்து நிலை​ய​மும் தற்​காலிக​மாக செயல்​ப​டாது.

திரு​வொற்​றியூர், மணலி மண்​டலங்​களுக்கு உட்​பட்ட கத்​தி​வாக்​கம், எண்​ணூர், திரு​வொற்​றியூர், காலடிப்​பேட்​டை, சடையன்​குப்​பம் ஆகிய பகு​தி​களுக்கு குழாய்​கள் மூலம் வழங்​கப்​படும் குடிநீர் விநி​யோகம் தற்​காலிக​மாக நிறுத்​தப்​படு​கிறது.

எனவே, பொது​மக்கள் முன்​னெச்​சரிக்​கை​யாக வேண்​டிய அளவு குடிநீரை சேமித்து வைத்​துக்​கொள்ள வேண்​டும். அவசர தேவை​களுக்கு லாரி​கள் மூலம் குடிநீர் பெற சென்னை குடிநீர் வாரி​யத்​தின் இணை​யதளத்​தில் பதிவு செய்து பெறலாம். இவ்​வாறு செய்திக்குறிப்பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

திருவொற்றியூர், மணலி​ பகுதிகளில் குடிநீர் விநியோகம் டிச.22-ம் தேதி தற்காலிக நிறுத்தம்
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in