மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, டெல்டா பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மேட்டூர் அணையில் ஏற்கெனவே விநாடிக்கு 3,000 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 11 மணிக்கு 6,000 கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 3,981 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று 3,459 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 116.22 அடி, நீர் இருப்பு 87.56 டிஎம்சியாக இருந்தது.