தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த டிட்டோ ஜாக் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

திருச்சி: தமிழக அளவில் டிட்டோ ஜாக் உயர்​மட்​டக் குழு உறுப்​பினர்​களின் அவசரக் கூட்​டம் காணொலி வாயி​லாக நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. கூட்​டத்​தில், டிட்டோ ஜாக்​கில் அங்​கம் வகிக்​கும் சங்​கங்​களின் உயர்​மட்​டக் குழு உறுப்​பினர்​கள் 11 பேர் கலந்து கொண்​டனர்.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டிட்டோ ஜாக்சார்​பில் நாளை வேலைநிறுத்​தப் போராட்​டம் நடத்​து​வ​தால், அதற்​கடுத்த நாள் ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்​தப்​படும் உண்​ணா​விரதப் போராட்​டம் பாதிப்​படை​யும்.

மேலும், டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர்​களில் பலர், ஜாக்டோ ஜியோ​விலும் ஒருங்​கிணைப்​பாளர்​களாக உள்​ளனர். இதனால் ஏற்​ படும் நடை​முறைச் சிக்​கல்​களால் போராட்​டம் தொய்​வடைய வாய்ப்​புள்​ளது என்​ப​தால், டிட்டோ ஜாக் போராட்​டத்தை தற்​காலிக​மாக தள்​ளிவைக்க வேண்​டும் என்று ஜாக்டோ ஜியோ சார்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டது.

இந்​தக் கூட்​டத்​தில் தெரிவிக்​கப்​பட்ட பெரும்​பான்மை உறுப்​பினர்​களின் கருத்​துகள் அடிப்​படை​யில் நாளை நடை​பெற இருந்த டிட்டோ ஜாக் வேலைநிறுத்​தப் போராட்​டம் தற்​காலிக​மாக தள்ளி வைக்​கப்​பட்​டது. ஜாக்டோ ஜியோ போராட்​டத்​துக்​குப் பிறகு டிக்டோ ஜாக்​ போ​ராட்​டம்​ நடத்​தப்​படும்​ என்​றும்​ இக்​கூட்​டத்​தில்​ முடிவெடுக்கப்பட்டது.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 டிசம்பர் 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in