மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.67 அடியாக குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.67 அடியாக குறைந்தது
Updated on
1 min read

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்​வரத்து கணிச​மான அளவுக்கு குறைந்​துள்​ள​தா​லும், டெல்டா பாசனத்துக்கு தண்​ணீர் திறக்​கப்​படு​வ​தா​லும் அணை​யின் நீர்மட்டம் 113.67 அடி​யாக சரிந்​ததுள்​ளது.

காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தும், குறைந்​தும் காணப்​படும். அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 1,824 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 1,881 கன அடி​யாக அதி​கரித்​தது.

அணை​யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு விநாடிக்கு 9,500 கனஅடி​யும், கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 400 கனஅடி​யும் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

நீர்​வரத்தை விட தண்​ணீர் திறப்பு அதி​க​மாக உள்​ள​தால் நீர்மட்டம் குறை​யத் தொடங்​கி​யுள்​ளது. அணை​யின் நீர்மட்டம் 114.15 அடியி​லிருந்து 113.67அடி​யாக​வும், நீர் இருப்பு 84.44 டிஎம்​சியி​லிருந்து 83.73 டிஎம்​சி​யாக​வும் சரிந்​துள்​ளது.

அணைக்கு நீர்​வரத்து குறைந்து வரு​வ​தா​லும், நீர்மட்டம் சரிந்து வரு​வ​தா​லும் வெள்​ளக் கட்​டுப்​பாட்டு மையம் கலைக்​கப்​பட்​டுள்​ளது என்று நீர்​வளத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் கடந்த 15-ம் தேதி காலை விநாடிக்கு 4,000 கனஅடி​யாக பதி​வான நீர்​வரத்து நேற்று முன்​தினம் காலை 3,000 கனஅடி​யாக குறைந்​தது. நேற்று காலை நீர்​வரத்து 3,000 கனஅடி​யாகவே நீடித்​தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.67 அடியாக குறைந்தது
சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்ட ஒரு மாதத்தில் 26 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in