மேட்டூர் அணைக்கு 531 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணை |கோப்புப் படம்

மேட்டூர் அணை |கோப்புப் படம்

Updated on
1 min read

மேட்டூர்: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 531 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது.

காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​தும், குறைந்​தும் காணப்​படு​கிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 333 கன அடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 531 கனஅடி​யாக அதி​கரித்​தது. காவிரி கரையோர மக்​களின் குடிநீர் தேவைக்​காக அணையி​லிருந்து விநாடிக்கு 1,200 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

நீர் திறப்பை விட நீர் வரத்து குறை​வாக உள்​ள​தால் அணை​யின் நீர் மட்​டம் சரிந்து வரு​கிறது.நீர்​மட்​டம் 82.64 அடியி​லிருந்து 82.56 அடி​யாக​வும், நீர் இருப்பு 44.63 டிஎம்​சி​யில் இருந்து 44.55 டிஎம்​சி​யாக​வும் குறைந்​துள்​ளது.

<div class="paragraphs"><p>மேட்டூர் அணை |கோப்புப் படம்</p></div>
“எங்கள் எதிரிகள் உங்கள் நிலத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்” - வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in