ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 500 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்

ஒகேனக்கல்

Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் 7 நாட்களுக்குப் பிறகு நீர்வரத்து விநாடிக்கு 500 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 24-ம் தேதி காலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 100 கனஅடியாக பதிவானது. ஆனால், 25-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 150 கனஅடியாக அதிகரித்தது. அன்று முதல் 31-ம் தேதி மாலை வரை 7 நாட்களாக விநாடிக்கு 150 கனஅடியாகவே நீர்வரத்து நீடித்து வந்தது.

ஜூலை 31-ம் தேதி மாலையில் விநாடிக்கு 300 கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து இன்று (ஆகஸ்ட் 1-ம் தேதி) காலை அளவீட்டின்போது விநாடிக்கு 500 கன அடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>ஒகேனக்கல்</p></div>
“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே நமக்கு இருக்கும் ஒரே வழி” - அமைச்சர் நிர்மல்குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in