ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,200 கனஅடியாக உயர்வு

ஒகேனக்கல் அருவி. (கோப்பு படம்)

ஒகேனக்கல் அருவி. (கோப்பு படம்)

Updated on
1 min read

தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து விநாடிக்கு 1,200 கனஅடி​யாக உயர்ந்​தது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் கடந்த 13-ம் தேதி காலை விநாடிக்கு 300 கனஅடி​யாகப் பதி​வான நீர்​வரத்து 14-ம் தேதி காலை 200 கனஅடி​யாகக் குறைந்​தது.

அன்று முதல் நேற்று முன்​தினம் மாலை வரை 200 கனஅடி​யாகவே நீடித்த நீர்​வரத்​து, நேற்று காலை 1,200 கனஅடி​யாக உயர்ந்​தது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 50 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 72 கனஅடி​யாக அதி​கரித்​தது.அணையி​லிருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 2,500 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

தண்​ணீர் திறப்​பை​விட, நீர்​வரத்து குறை​வாக உள்​ள​தால் நீர்​மட்​டம் சரிந்து வரு​கிறது. அணை​யின் நீர்​மட்​டம் 89.87 அடியி​லிருந்து 89.66 அடி​யாக​வும், நீர் இருப்பு 52.50 டிஎம்​சியி​லிருந்து 52.27 டிஎம்​சி​யாக​வும் குறைந்​துள்​ளது.

<div class="paragraphs"><p>ஒகேனக்கல் அருவி. (கோப்பு படம்)</p></div>
நாகர்கோவில் | வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 130 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி செய்தவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in