மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் நாளை ஊதிய ஒப்பந்த பேச்சு

மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் நாளை ஊதிய ஒப்பந்த பேச்சு
Updated on
1 min read

சென்னை: மின்வாரிய தொழிற்​சங்​கங்​களு​டன் நாளை 2-ம் கட்ட ஊதிய ஒப்​பந்த பேச்​சு​வார்த்தை நடை​பெறவுள்ளது. தமிழகத்​தில் மின்வாரிய ஊழியர்​களுக்கு 4 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை ஊதிய உயர்வு வழங்​கப்​பட்டு வரு​கிறது.

கடந்த 2019-ம்ஆண்டு டிச.1-ம் தேதிமுதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுபலகட்ட பேச்​சு​வார்த்தைக்குபின் கடந்த 2023-ம் ஆண்டு மேமாதம் இறுதி செய்​யப்​பட்டு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்​கப்​பட்​டது.

இதையடுத்து 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்​கி​யிருக்க வேண்​டும். எனவே ஊதிய ஒப்​பந்த பேச்​சு​வார்த்​தையை தொடங்க வேண்​டும் என்று பல்​வேறு தொழிற்​சங்​கங்​களும் தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தன.

இந்​நிலை​யில் கடந்த ஜூலை 24-ம் தேதி மின் பகிர்​மான நிதி இயக்​குநர் மலர்​விழி தலை​மையி​லான ஊதிய திருத்த குழு​வுடன் முதல்​கட்ட ஊதிய உயர்வு ஒப்​பந்​த பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

இந்​தக் கூட்​டத்​தில் 19 தொழிற்​சங்​கங்​களைச் சார்ந்த நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர். இதில் அனைத்து பணி​யாளர்​களுக்​கும் அடிப்​படை சம்​பளத்​தில் 25 சதவீதம் உயர்த்​தி, ஊதிய உயர்வு வழங்க வேண்​டும். காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும்.

கள உதவி​யாளர், கணக்​கீட்​டாளர், தொழில்​நுட்ப பணி​யாளர் உள்​ளிட்ட பதவி​களை உடனடி​யாக நிரப்ப வேண்​டும். உரிய முறை​யில் சர்​வீஸ் வெயிட்​டேஜ் வழங்க வேண்​டும்.

ஊதிய உயர்வு பேச்​சு​வார்த்தை நிறைவு​பெற்று ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​படும் வரை இடைக்​கால நிவாரண​மாக மாதம்​தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்​டும் என தொழிற்​சங்​கத்​தினர் கோரிக்கை வைத்​தனர்.

இந்​நிலை​யில் 2-ம் கட்ட ஊதிய ஒப்​பந்த பேச்​சு​வார்த்தை நாளை (டிச.16) மின்வாரிய தலை​மையகத்​தில் நடை​பெறும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தொழிற்​சங்​கங்க பிரி​தி​நி​தி​கள் இதில் பங்​கேற்க அழைப்​பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் நாளை ஊதிய ஒப்பந்த பேச்சு
அவகாசம் முடிவடைந்த பிறகும் உரிமம் பெறாத செல்லப் பிராணிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்: ஆய்வு நடத்த மாநகராட்சி திட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in