மீன் பிடி படகில் ஆபத்தான பயணம்: பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து வாக்களித்த வாக்காளர்கள்

பழவேற்காடு அருகே தாங்கல்பெரும்புலம்  வாக்காளர்கள் நேற்று மீன்பிடி படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து சென்று, கோரைக்குப்பம் வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

பழவேற்காடு அருகே தாங்கல்பெரும்புலம் வாக்காளர்கள் நேற்று மீன்பிடி படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து சென்று, கோரைக்குப்பம் வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

Updated on
1 min read

பொன்னேரி: பொன்​னேரி (தனி) தொகு​திக்கு உட்​பட்ட பழவேற்​காடு அருகே உள்​ளது தாங்​கல்​பெரும்​புலம் ஊராட்​சி. தாங்​கல்​பெரும்​புலம், எடையன்​குளம், கருங்​காலி, கோரைக்​குப்​பம் ஆகிய கிராமங்​களை உள்​ளடக்​கிய இந்த ஊராட்​சி​யில் 2 ஆயிரம் பேர் வசித்து வரு​கின்​றனர்.

இவர்​கள் தேர்​தல்​களில் வாக்​களிப்​ப​தற்​கான இரு வாக்கு சாவடிகள், வங்​காள​விரி​குடா கடற்​கரையையொட்​டி​யுள்ள கோரைக்​குப்​பம், சத்​தான்​குப்​பம் ஆகிய மீனவ கிராமங்​களில் பல ஆண்​டு​களாக இருந்து வந்​தன.

இதனால், தாங்​கல்​பெரும்​புலம் கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள், மீன் படகில் ஆபத்​தான பயணம் மேற்​கொண்டு பக்கிங்ஹாம் கால்​வாயை கடந்து சென்​று, பல ஆண்​டு​களாக வாக்​களித்து வந்​தனர்.

இந்​நிலை​யில், சுனாமி காரண​மாக சாத்​தான்​குளம் மீனவ மக்​கள், பக்கிங்ஹாம் கால்​வாய் அருகே அமைக்​கப்​பட்ட சுனாமி குடி​யிருப்​புக்கு இடம் மாறினர். இதனால், அப்​பகு​தி​யில் ஒரு வாக்கு சாவடி அமைக்​கப்​பட்​டுள்​ளது.

அதில், சாத்​தான்​குளம் மீனவ மக்​கள் வாக்​களித்து வரு​கின்​றனர். அதே நேரத்​தில், தாங்​கல்​பெரும்​புலம், எடையன்​குளம் கிராமங்​களை சேர்ந்த வாக்​காளர்​கள் பட்​டியல், கோரைக்​குப்​பம் வாக்​குச் சாவடி​யில் இணைக்​கப்​பட்​டது.

இதனால், இவ்​விரு கிராம மக்​கள் 10 கிமீ தூரம் சுற்றி கோரைக்​குப்​பம் வாக்​குச் சாவடி​யில் வாக்​களிக்​கும் நிலை கடந்த 15 ஆண்​டு​களுக்கு மேலாக நீடிக்​கிறது.

ஆகவே, சாத்​தான்குளம் பகு​தி​யில் உள்ள ஊராட்சி ஒன்​றிய பள்​ளி​யில் தாங்​கல்​பெரும்​புலம், எடையன்​குளம் மக்​களுக்​காக வாக்​குச் சாவடி அமைக்​க வேண்​டும் என, தொடர்ந்த கோரிக்கை வைத்​தும் பலனில்லை.

இந்​நிலை​யில், நீண்ட தூரம் சுற்றி கோரைக்​குப்​பம் வாக்​குச் சாவடிக்கு சென்று வாக்​களிப்​பதை தவிர்க்​கும் வித​மாக தாங்​கல்​பெரும்​புலம் கிராம மக்​கள் மீன்​பிடி படகில் ஆபத்​தான பயணம் மேற்​கொண்டு வாக்​களித்து வரு​வதும், எடையன்​குளம் கிராம மக்​கள் சுமார் 7 கிமீ தூரம் டிராக்​டர் மூலம் பயணித்து வாக்​களித்து வரு​வதும் தொடர் கதை​யாக உள்​ளது.

தாங்​கல்​பெரும்​புலம் கிராமத்​தைச் சேர்ந்த 200-க்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​கள் நேற்று மீன்​பிடி படகில் ஆபத்​தான பயணம் மேற்​கொண்டு பக்​கிங்​ஹாம் கால்​வாயை கடந்து சென்​று, கோரைக்​குப்​பம் வாக்​குச் சாவடி​யில் வாக்​களித்​தனர். தேர்​தல் ஆணை​யம்​ உரிய நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​ என கோரிக்​கை எழுந்துள்ளது.

<div class="paragraphs"><p>பழவேற்காடு அருகே தாங்கல்பெரும்புலம்  வாக்காளர்கள் நேற்று மீன்பிடி படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து சென்று, கோரைக்குப்பம் வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். </p></div>
போதிய பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கம், செங்கையில் பயணிகள் மறியல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in