தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5.73 கோடியாக உயர்வு: தேர்தலுக்கு ரூ.1,302 கோடி நிதி ஒதுக்கீடு

தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
அர்ச்சனா பட்நாயக்

அர்ச்சனா பட்நாயக்

Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைப் பொதுத் தேர்​தலுக்​காக ரூ.1,302 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், வாக்​காளர் எண்​ணிக்கை 5.73 கோடி​யாக உயர்ந்​துள்​ள​தாக​வும் தமிழகத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைப் பொதுத்​தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. வேட்பு மனுத் தாக்​கல் மற்​றும் மனுக்​கள் பரிசீலனை முடிந்​துள்ள நிலை​யில், நாளை இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்பட உள்​ளது. இந்​நிலை​யில், தேர்​தலுக்​கான ஏற்​பாடு​கள் குறித்து தமிழகத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் கூறிய​தாவது: தற்​போது தமிழகம் முழு​வதும் உள்ள 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் அமைந்​துள்ள பள்​ளிக் கட்​டிடங்​கள் உள்​ளிட்ட இடங்​களில் தண்​ணீர், கழிப்​பறை மற்​றும் சாய்​தளம் போன்ற அடிப்​படை வசதி​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

தமிழகம் முழு​வதும் 3,022 வாக்​குச்​சாவடி மையங்​களில் உள்ள 5,938 வாக்​குச்​சாவடிகள் பதற்​றம் மற்​றும் மிக​வும் பதற்​ற​மானவை பட்​டியலில் உள்​ளன. கடந்த தேர்​தல்​களை விட தற்​போது எண்​ணிக்கை குறைந்​துள்​ளதுடன் இடங்​களும் மாறி உள்​ளன.

கடைசி​யாக கண்​டறியப்​படும் பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் எண்​ணிக்​கை​யில் துணை ராணுவப் படை​யினர் நியமிக்​கப்​படு​வார்​கள். தவிர நுண் பார்​வை​யாளர்​கள், வெப் கேம், வீடியோ பதிவுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. ஒரே இடத்​தில் 10-க்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் இருந்​தால் அங்கு துணை ராணுவப் படை​யினர் அதி​கள​வில் நிறுத்​தப்​படு​வார்​கள். தமிழகத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட துணை ராணுவப் படை​யினர் ஏப்​.13-ம் தேதிக்​குள் வந்​து​விடு​வார்​கள்.

ஒரே மாதிரியான பிரச்சார அனுமதி: வேட்​பாளர்​கள், தலை​வர்​களுக்​கான பிரச்​சார அனு​ம​தியை விதி​முறை​களின்​படி ஒரே​மா​திரி​யாக வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக காவல் துறைக்கு கடிதம் எழுதப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் தற்​போது வரை 85 வயதை கடந்த 2.50 லட்​சம் பேர் வீட்​டில் இருந்தே தபால் வாக்கு மூலம் வாக்​களிக்க விண்​ணப்​பித்​துள்​ளனர்.

தற்​போது வெப்​பம் அதி​கள​வில் உள்​ள​தால், வாக்​குச்​சாவடிகளில் போதிய நிழல் இல்​லாத பகு​தி​களில் வரிசை​யில் நிற்​பவர்​கள் அனை​வருக்​கும் நிழல் தரும் வகை​யில் ‘ஷாமி​யா​னா’ பந்​தல் அமைக்​க​வும், இருக்​கைகள் போட​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. வாக்​குப்​ப​திவு அலு​வலர்​களுக்​கும் போதிய வசதி செய்து தர உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவுக்கு தேவை​யான மின்​னணு வாக்​குப்​ப​திவு, விவி​பாட் இயந்​திரங்​கள் 120 சதவீதத்​தைத் தாண்​டி​யும் இருப்பு உள்​ளது. இந்​தத் தேர்​தலுக்கு ரூ.1,302 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2024 நாடாளு​மன்​றத் தேர்​தலின் போது ரூ.1,009 கோடி, முந்​தைய 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் போது ரூ.795 கோடி செல​வானது.

‘சி விஜில்’ செயலியில் புகார்: ‘சி விஜில்’ செயலி மூலம் பெறப்​படும் புகார்​களுக்​கு, 100 நிமிடங்​களுக்​குள் தீர்வு காண நடவடிக்​கைகள் எடுக்​கப்​படு​கின்​றன. இது​வரை இந்​தச் செயலி​யில் 2,364 புகார்​கள் பெறப்​பட்​டுள்​ளன. அதே போல், தொலைபேசி வாயி​லாக 43,220 புகார்​கள் வந்​துள்​ளன. இவற்​றின் மீது உடனடி​யாக நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

தமிழகத்​தில் தேர்​தல் பறக்​கும் படைகள், நிலை கண்​காணிப்​புக் குழுக்​களின் நடவடிக்கை அடிப்​படை​யில், ரூ.92.07 கோடி ரொக்​கம், ரூ.2.04 கோடி மது​பானம், ரூ.75.76 கோடிக்​கான போதைப் பொருட்​கள், ரூ.214.38 கோடிக்​கான தங்​கம் உள்​ளிட்ட விலை​யுயர்ந்த பொருட்​கள், ரூ.78.49 கோடி மதிப்​பிலான இலவச பொருட்​கள் என ரூ.462.74 கோடி மதிப்​பிலான பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டன.

இதில், ரூ.278 கோடி மதிப்​பிலான ரொக்​கம், பொருட்​கள் உரிய ஆவணங்​கள் அளிக்​கப்​பட்​ட​தால் திரும்ப கொடுக்​கப்​பட்டு வரு​கிறது. மீத​முள்ள ரொக்​கம் உள்​ளிட்​டவை வரு​மான வரித் துறை, அமலாக்​கத் துறை​யின​ரால் கைப்​பற்​றப்​பட்டு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​தார்.

18 முதல் 19 வயது வரை: தமிழகத்​தில் சிறப்பு தீவிர வாக்​காளர் சரி​பார்ப்​புப் பணி​கள் முடிந்து கடந்த பிப்​.23-ம் தேதி இறுதி வாக்​காளர்​கள் பட்​டியல் வெளி​யானது. அப்​பட்​டியலின்​படி, 2,77,38,925 ஆண், 2,89,60,838 பெண், 7,617 இதர வாக்​காளர்​கள் என மொத்​தம் 5,67,07,380 வாக்​காளர்​கள் இடம்​பெற்​றிருந்​தனர். இதில் 18 முதல் 19 வயதுக்கு உட்​பட்ட வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 12.51 லட்​சம். மாற்​றுத்​திற​னாளி​கள் என குறிக்​கப்​பட்ட வாக்​காளர்​கள் 4.63 லட்​சம், 85 வயதுக்கு மேற்​பட்ட மூத்த குடிமக்​கள் 8.99 லட்​ச​மாக உள்​ளனர்.

வாக்​காளர் பட்​டியலில் இடம் பெறாதவர்​கள், பெயர் விடு​பட்​ட​வர்​கள், பெயர் சேர்த்​தல், நீக்​கம் செய்​தல் உள்​ளிட்​ட​வற்​றுக்கு மனுக்​கள் பெறப்​பட்​டன. வழக்​க​மாக, வேட்பு மனுத் தாக்​கல் முடி​யும் நாளில் கூடு​தல் வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​படும். அந்த வகை​யில் வாக்​காளர் பட்​டியலைத் தமிழகத் தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று இணை​யதளத்​தில் வெளி​யிட்​டார்.

5,73,43,291 வாக்​காளர்​கள்: அதன்​படி, தமிழகம் முழு​வதும் 2 கோடியே 80 லட்​சத்து 30,658 ஆண்​கள், 2 கோடியே 93 லட்​சத்து 4,905 பெண்​கள், 7,728 3-ம் பாலினத்​தவர் என 5 கோடியே 73 லட்​சத்து 43,291 வாக்​காளர்​கள் உள்​ளனர். இதன்​படி, பிப்​.23-ம் தேதி வெளி​யான இறுதி வாக்​காளர் பட்​டியலை விட 6 லட்​சத்து 35,911 வாக்​காளர்​கள் அதி​கம் உள்​ளனர். அத்​துடன் 19-20 வயதுடைய வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 14 லட்​சத்து 59,039 ஆகவும், 80 வயதுக்கு மேற்​பட்ட வாக்​காளர் எண்​ணிக்கை 10 லட்​சத்து 62,752 ஆகவும் உயர்ந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>அர்ச்சனா பட்நாயக் </p></div>
ஸ்டாலின், இபிஎஸ், விஜய், சீமான் மனு ஏற்பு: வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in