ஸ்டாலின், இபிஎஸ், விஜய், சீமான் மனு ஏற்பு: வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் போட்டியில்லை
ஸ்டாலின், இபிஎஸ், விஜய், சீமான் மனு ஏற்பு: வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு
Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் இறு​திப்​பட்​டியல் நாளை வெளி​யாகும் நிலை​யில், மு.க.ஸ்​டா​லின், பழனி​சாமி, விஜய், சீமான் ஆகியோரின் வேட்பு மனுக்​கள் ஏற்​கப்​பட்​டுள்​ளன. எடப்​பாடி​யில் தவெக வேட்​பாளரின் மனு நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களுக்​கும் ஒரே கட்​ட​மாக நடை​பெறவுள்ள தேர்​தலுக்​கு, வேட்பு மனுத் தாக்​கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளி​லேயே முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தவெக தலை​வர் விஜய், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்​டோர் வேட்பு மனுத் தாக்​கல் செய்​தனர்.

சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கடந்த 4-ம் தேதி வேட்பு மனுத் தாக்​கல் செய்​தார். ஏப்​ரல் 6-ம் தேதி நேற்று முன்​தினம் வேட்பு மனுத் தாக்​கல் செய்ய கடைசி நாள் என்​ப​தால், அனைத்து தொகு​தி​களி​லும் வேட்பு மனுத் தாக்​கல் செய்ய அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்த வேட்​பாளர்​கள், சுயேச்சை வேட்​பாளர்​கள் குவிந்​தனர்.

எடப்​பாடி தொகு​தி​யில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி (இபிஎஸ்), சாத்​தூரில் பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், விருத்​தா​சலத்​தில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், ஸ்ரீபெரும்​புதூரில் தமிழகக் காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தரு​மபுரி​யில் பாமக தலை​வர் அன்​புமணி​யின் மனைவி சவுமியா அன்​புமணி, அவி​நாசி​யில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், மயி​லாப்​பூரில் தமிழகப் பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், கோவை வடக்கு தொகு​தி​யில் பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனி​வாசன் உள்​ளிட்​டோர் வேட்பு மனுத் தாக்​கல் செய்​தனர்.

சென்​னை​யில் 628 உட்பட 234 தொகு​தி​களி​லும் மொத்​தம் 7,599 வேட்பு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. ஏராள​மானோர் கூடு​தல் மனுக்​களைத் தாக்​கல் செய்​தனர். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 4 மனுக்​களை​யும், தவெக தலை​வர் 3 மனுக்​களை​யும் தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், நேற்று பகல் 11 மணிக்கு தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் தலை​மை​யில் வேட்பு மனுக்​கள் பரிசீலனை தொடங்​கியது. இதில் வேட்​பாளர்​கள், வேட்​பாளர்​களின் முகவர்​கள் பங்​கேற்​றனர். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், பழனி​சாமி, சீமான், நயி​னார் நாகேந்​திரன், செல்​வப்​பெருந்​தகை, சவுமியா அன்​புமணி, பிரேமலதா விஜய​காந்த் உள்​ளிட்​டோரின் வேட்பு மனுக்​கள் ஏற்றுக் கொள்​ளப்​பட்​டன.

ஆட்​சேபனை: பெரம்​பூர் தொகு​தி​யில் தவெக தலை​வர் விஜய்​யின் வேட்பு மனு​வில், சான்​றொப்​பம் காலாவ​தி​யான நோட்​டரி வழக்​கறிஞரிடம் இருந்து பெறப்​பட்​ட​தாக பாமக​வினர் ஆட்​சேபனை தெரி​வித்​த​தால் பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்​டது. இதையடுத்து அதற்​குரிய ஆவணங்​களைச் சமர்​பித்த பின்​னர், விஜய்​யின் மனு ஏற்​கப்​பட்​டது.

அதே​போல், திருச்சி கிழக்​குத் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தவெக தலை​வர் விஜய்​யின் மனு ஏற்​கப்​பட்​டது. வில்​லி​வாக்​கத்​தில் ஆதவ் அர்​ஜுனா சொத்து விவரங்​களை மறைத்​த​தாக சுயேச்சை வேட்​பாளர்​கள் குற்​றம் சாட்​டிய​தால், பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்​டது. இறு​தி​யில் அவரது மனு​வும் ஏற்​கப்​பட்​டது.

கோபிச்​செட்​டிப்​பாளை​யம் தொகு​தி​யில் வரு​மான வரித் தாக்​கல் செய்​ய​வில்லை எனக் கூறி, தவெக வேட்​பாளர் செங்​கோட்​டையனின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்​டு, நீண்ட நேரம் கழித்து ஏற்​கப்​பட்​டது. அவருக்கு அதி​முக​வினர் எதிர்ப்பு தெரி​வித்​திருந்​தனர். சென்னை ஆர்​.கே.நகரில் தவெக வேட்​பாளர் மரிய வில்​சன் முறை​யாக மனுவை பூர்த்தி செய்​யாத​தால் பரிசீலனை நிறுத்தி வைக்​கப்​பட்டு கடைசி​யில் ஏற்​கப்​பட்​டது.

எடப்​பாடி தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் அருண்​கு​மார் மற்​றும் அவருக்கு மாற்று வேட்​பாள​ராக அவரது மனைவி நித்யா மனுத்​தாக்​கல் செய்​திருந்​தனர். அங்​கீகரிக்​கப்​ப​டாத அரசி​யல் கட்​சிகளின் வேட்​பாளரை அதே தொகு​தியை சேர்ந்த 10 பேர் முன்​மொழிய வேண்​டும் என்று விதி​முறை உள்​ளது.

ஆனால், அருண்​கு​மாரின் மனு​வில் 8 பேர் மட்​டுமே முன்​மொழிந்​துள்​ளனர். உரிய விதி​முறை​களைப் பின்​பற்​றாத​தால் அருண்​கு​மாரின் மனுவை தள்​ளு​படி செய்​து, தேர்​தல் நடத்​தும் அலு​வலர் நடராஜன் உத்​தர​விட்​டார். இதே காரணத்​துக்​காக, மாற்று வேட்​பாளர் நித்​யா​வின் மனு​வும் தள்​ளு​படி செய்​யப்​பட்​டது. இதனால், எடப்​பாடி தொகு​தி​யில் தவெக போட்​டி​யிட முடி​யாத சூழல் ஏற்​பட்​டுள்​ளது.

சிதம்​பரம் தொகு​தி​யில் தவெக வேட்​பாளர் பாரி​யின் வேட்பு மனு​வில் எழுத்​துப் பிழை மற்​றும் முறை​யாகப் பூர்த்தி செய்​யப்​ப​டாத காரணங்​களுக்​காக நிராகரிக்​கப்​பட்​டது. அதனால், மாற்று வேட்​பாள​ராக வேட்பு மனுத் தாக்​கல் செய்​திருந்த அவரது தந்தை நெடுஞ்​செழியனின் மனு ஏற்​கப்​பட்​டது.

பரிசீலனை முடி​வில் சென்​னை​யில் 462 உட்பட 234 தொகு​தி​களி​லும் 4,738 வேட்பு மனுக்​கள் ஏற்​றுக் கொள்​ளப்​பட்​டன. நாளை பிற்​பகல் 3 மணி வரை வேட்பு மனுக்​களை திரும்​பப் பெறு​வதற்கு கால அவகாசம் உள்​ளது. அதன்​பிறகு இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யாக​வுள்​ளது.

விஜய் பெயரில் 4 பேர்: தவெக தலை​வர் விஜய் போட்​டி​யிடும் பெரம்​பூர் தொகு​தி​யில் 66 வேட்பு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இதில், விஜய்​யின் மனு உட்பட 48 பேரின் வேட்பு மனுக்​கள் ஏற்​கப்​பட்​டன. மற்ற மனுக்​கள் நிராகரிக்​கப்​பட்​டன. பொது​வாகவே நட்​சத்​திர வேட்​பாளரை வீழ்த்த, அவர் பெயரிலேயே மற்ற கட்​சிகள் அதி​க​மான சுயேச்சை வேட்​பாளர்​களை வேட்பு மனுத் தாக்​கல் செய்ய வைப்​பது வாடிக்​கை​யாக இருக்​கிறது.

அந்த வகை​யில் பெரம்​பூர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தவெக தலை​வர் விஜய், அவரது முழுப்​பெய​ரான ஜோசப் விஜய் என்ற பெயரில் வேட்பு மனுத் தாக்​கல் செய்​துள்​ளார். அவருக்கு எதி​ராக எம்​.ஜோசப், எஸ்​.ஜோசப், கே.​விஜய், ஜி.​விஜய் ஆகியோர் களம் இறக்​கப்​பட்​டுள்​ளனர். இந்நிலையில், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. அந்த மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஸ்டாலின், இபிஎஸ், விஜய், சீமான் மனு ஏற்பு: வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு
சாத்தான்குளம் மரணம்; மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளருக்கும் தண்டனை: கமல்ஹாசன் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in