மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை

மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை
Updated on: 
1 min read

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படுகின்றன.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் என 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தாராபுரத்தில் சத்யபாமா (தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்), கார்த்திகா (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் உட்பட 22 பேர் போட்டியிட்டனர்.

மதுராந்தகத்தில் 86.26%, தாராபுரத்தில் 80.25% வாக்குகள் பதிவாகின. இன்று (9-ம் தேதி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்.

மதுராந்தகத்தில் 22, தாராபுரத்தில் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியும்.

மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை
போராட்டங்களால் டெல்லியில் அசாதாரண நிலை: தலைமைத் தேர்தல் ஆணையரின் பாதுகாப்புக்கு கூடுதல் வீரர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in