சுசீந்திரம் கோயில் மார்கழி தேரோட்டத்தில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக கோஷம்!

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம் நேற்று நடைபெற்றது.  (அடுத்தபடம்) தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. (அடுத்தபடம்) தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ்.

Updated on
1 min read

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழா தேரோட்டத்தை தொடங்கி வைக்க வந்த, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக பக்தர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் 10 நாள் மார்கழி திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதனால், நேற்று அதிகாலையில் இருந்து சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைப்பதாக இருந்தது.

காலை 9.15 மணிக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, விஜய் வசந்த் எம்.பி. மற்றும் பிரமுகர்கள் வந்திருந்தனர்.

தேருக்கான பூஜை மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்தன. தேரை வடம்பிடித்து இழுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர். காலை 9.35 மணியளவில் அமைச்சர் சேகர்பாபு தேரின் அருகே வந்தபோது, அங்கு நின்ற இந்து அமைப்பினரும், பக்தர்களும் ‘பாரத் மாதாக்கி ஜே...’ என உரக்க கோஷமிட்டனர்.

தொடர்ச்சியாக அவர்கள் கோஷமிட்டதால், அமைச்சர் சேகர்பாபு சற்று கோபத்துடன் பக்தர்களை கடிந்து கொண்டார். இதனால், அமைச்சர் சேகர்பாபுவின் பெயரைக் கூறி அவருக்கு எதிராக அங்கு நின்றவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது. பிரமுகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் மற்றும் பிரமுகர்கள் தேரின் அருகே நகர்ந்தனர். அப்போதும் எதிர்ப்பு கோஷம் எழுந்ததால் பரபரப்பு நிலவியது. அதன் பின்னர், தேரை வடம் பிடித்து இழுத்து அவர்கள் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இக்காட்சிகள் அடங்கிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரிய தேரில் தாணுமாலய சுவாமி மற்றும் அம்பாள், அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மன், பிள்ளையார் தேரில் விநாயகர் ஆகியோர் ரத வீதிகளில் வலம் வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு, நாகர்கோவில் - சுசீந்திரம் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குரத்து நெரிசல் ஏற்பட்டது.

<div class="paragraphs"><p>சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம் நேற்று நடைபெற்றது.  (அடுத்தபடம்) தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ்.</p></div>
புதுக்கோட்டை சாலையில் தடை - இதய நோயாளியான தாயை காப்பாற்ற போலீஸாரிடம் கதறிய பெண் மருத்துவர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in